இர்பான் மீது வன்மம் இல்லை.. கோபம் இருக்கு.. தகுதி இல்லாதவரை வேற எப்படி விமர்சிக்க முடியும்? பாரு பளீச்

சென்னை: வி.ஜே. பார்வதி கடந்த சில தினங்களாகவே, யூடியூபர் இர்பான் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அதற்கு காரணம், இர்பான் செய்த செயல் அப்படி. அதாவது, ரம்ஜான் தினத்தில் ஏழைகளுக்கு உதவுகிறேன் என, பழைய காலத்து ஜமீன் போல அவரது நடவடிக்கை இருந்தால், வி.ஜே. பாரு மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுவரை ஒரு வீடியோ, ஒரு எக்ஸ் பதிவு வெளியிட்டிருந்த நிலையில், தற்போது மற்றொரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இர்பானின் நடவடிக்கைகள் குறித்து வி.ஜே. பார்வதி மட்டும் இல்லாமல் பலரும் லெஃப்ட் ரைட் வாங்கிவிட்டார்கள். குறிப்பாக பல யூடியூப் சேனலைச் சேர்ந்தவர்களும் வெளுத்து விட்டார்கள். இதை எதிர்பார்க்காத இர்பான் தான் செய்தது பலரது மனதை காயப்படுத்தி உள்ளது, எனவே வருத்தம் தெரிவிக்கிறேன் என மன்னிப்பு கோரினார்.

VJ Paaru Slams Youtuber Irfan he is ethically wrong and Wrong Person at the Right Place

இர்பானின் மன்னிப்பு வீடியோவுக்குப் பின்னர் அவரை இணையவாசிகள் பலரும் கடுமையாக விமர்சித்தனர். குறிப்பாக வி.ஜே. பார்வதி இர்பானின் செயல் அவமானகரமானது எனக் கூறினார். மேலும் இர்பானுக்கு யாரும் பேட்டி கொடுக்காதீர்கள். அவர் முன் தயாரிப்பு எதுவும் இல்லாமல் பிரபலங்களை பேட்டி எடுக்கிறார். செய்யும் தொழிலுக்கு உண்மையாக அவர் இல்லை எனவும் விமர்சித்தார். இப்படியான நிலையில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில், இர்பனை மேலும் கழுவி ஊற்றியுள்ளார்.

வன்மம்: தற்போது வி.ஜே. பாரு வெளியிட்ட வீடியோவில், " இர்பான் குறித்து நான் வெளியிட்ட வீடியோ மற்றும் எக்ஸ் பதிவை பார்த்து, சிலர் வன்மம் என விமர்சிக்கிறார்கள். ஆனால் எனக்கு அவர் மீது வன்மம் எல்லாம் எதுவும் இல்லை. நான் வன்மத்தில் பேசுகிறேன் என்றே வைத்துக் கொள்ளுங்கள். எதனால், பிரபலங்கள் இர்பானுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்? இர்பான் பேட்டி என்கிற பெயரில் இந்த விதமான முன் தயாரிப்பும் இல்லாமல் வந்துள்ளர். எத்தனையோ பத்திரிகையாளர்கள் உள்ளார்கள், எத்தனையோ யூடியூப் சேனலைச் சேர்ந்தவர்கள் உள்ளார்கள்.

VJ Paaru Slams Youtuber Irfan he is ethically wrong and Wrong Person at the Right Place

இர்பான்: 4 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்கள், பி.ஆர். பேட்டிக்கு அரேஞ்ச் செய்து கொடுக்கிறார் என்றால், அந்த பேட்டிக்கு கொஞ்சமாவது முன் தயாரிப்புடன் போக வேண்டாமா? மோகன்லால் மற்றும் பிரித்விராஜை பேட்டி எடுக்கிறார், அவர்களிடத்தில் மம்முக்காவின் பெயரைக் கூட இர்பானால் சரியாகச் சொல்ல முடியவில்லை. இதுவே, ஒரு நிறுவனத்திற்கு கீழ் பணியாற்றும் நாங்கள் ஏதாவது கேள்வியைத் தவறாக கேட்டால், இவனை எல்லாம் யார் ஆங்கராக போட்டது? இவளை எல்லாம் யார் ஆங்கராக போட்டது எனக் கேள்வி எழுப்புகிறீர்கள் அல்லவா?

VJ Paaru Slams Youtuber Irfan he is ethically wrong and Wrong Person at the Right Place

கோபம்: நீங்கள் ஒரு ஃபுட் பிளாக்கராக கூட இருங்கள். அண்மையில் ஒரு இளம் பெண் யுவன் சங்கர் ராஜாவைப் பேட்டி எடுத்தார். அந்த பெண்ணுக்கு நாயகன் படம் குறித்து தெரியவில்லை. நாயகன் படம் குறித்து தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை. அதன் பின்னர், ஒரு நமட்டுச் சிரிப்பு வேற சிரிக்கிறார் அந்த பெண். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், நான் பேசுவது வன்மம் கிடையாது. ஆனால் அதனை, தவறான மனிதர்கள் சரியான இடத்தில் இருக்கிறார்கள் என்று வேண்டுமானால் கூறுவேன். தப்புத்தப்பாக பேட்டி எடுப்பதை பார்க்கும் போது, அடிப்படையாக ஒரு கோபம் வரும் இல்லை, அந்த கோபம்தான் இது" என பேசி, வீடியோ வெளியிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X