எப்படி நடிச்சாலும் கல்லா கட்டல.. பேய் படமாவது வொர்க்கவுட் ஆகுமா ரூட்டை மாற்றிய பிரபல நடிகர்!
சென்னை: நடிகர் வித்தார்த்துக்கு மைனா படம் கொடுத்த அளவுக்கு வெற்றியை வேறு எந்த படமும் இதுவரை தரவில்லை என்பது தான் நிதர்சனம்.
அவரும் எப்படி எப்படியோ நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்தாலும் ஒன்றும் ஒர்க்கவுட் ஆக மாட்டேங்குது.
இந்நிலையில், கமர்ஷியல் ஹிட் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள வித்தார்த் 'நட்சத்திரா' என்ற பேய் படத்தில் நடித்து வருகிறார்.

நல்ல நடிகர்
மைனா, குற்றமே தண்டனை, ஒரு கிடாயின் கருணை மனு, குரங்கு பொம்மை, காற்றின் மொழி, சித்திரம் பேசுதடி 2 என பல நல்ல படங்களில் தொடர்ந்து நடித்து வந்தாலும், நடிகர் வித்தார்த்துக்கு கமர்ஷியல் ரீதியான வரவேற்பு மற்றும் வெற்றி கிடைப்பதில்லை.

தல அஜித்துடன்
தல அஜித்தின் தீவிரமான ரசிகரான வித்தார்த், வீரம் படத்தில் அவருக்கு தம்பியாக நடித்திருந்தார். ஆனால், அதற்கு முன்பே பேரரசு இயக்கத்தில் வெளியான திருப்பதி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அஜித்துடன் நடித்துள்ளார்.

ரூட்டை மாத்து
அவ்வப்போது நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் வித்தார்த் நடித்து வந்தாலும், அவருக்கான இடம் கோலிவுட்டில் பெரிய அளவில் கிடைக்கவில்லை என்பது தான் நிதர்சனம். இந்நிலையில், தனது ரூட்டை கமர்ஷியல் பக்கம் திருப்ப முடிவு செய்துள்ளார் வித்தார்த்.
பேய் படம்
அறிமுக இயக்குநர் மனோஜ் ராம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நட்சத்திரா' எனும் பேய் படத்தில் நடிகர் வித்தார்த் நடித்து வருகிறார். இந்த படத்தில் செக்யூரிட்டி கதாபாத்திரத்தில் நடித்து வரும் வித்தார்த்துக்கு பேய்கள் எப்படி தொல்லைக் கொடுக்கிறது என்றும், அதிலிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்ற ரீதியில் கதை உருவாகியுள்ளதாம்.

நெடுநல்வாடை நாயகி
நெடுநல்வாடை படத்தில் நாயகியாக நடித்த அஞ்சலி நாயர் இந்த படத்தில் வித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்கிறார். சேரனின் திருமணம் படத்தைத் தயாரித்த பிரெனிஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











