புதிய படத்தில் கமிட்டான விதார்த்… இயக்குனர் யார் தெரியுமா ?
சென்னை : நடிகர் விதார்த் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்திற்கான பூஜை சென்னையில் போடப்பட்டது.
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக உள்ளது.
உறுமீன் திரைப்படத்தை இயக்கிய சக்திவேல் பெரியசாமி இப்படத்தை இயக்க உள்ளார்.

அறிமுகம்
தமிழ் சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த விதார்த். அர்ஜூன் நடித்து விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற திருவண்ணாமலை திரைப்படத்தில் வில்லன் நடிகராக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை அடுத்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

அங்கீகாரம் கிடைத்தது
பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான மைனா திரைப்படத்தில் அமலாபாலுக்கு இணையாக நடித்தார். இந்த திரைப்படத்தில் விதார்த்தின் நடிப்பு மெச்சும்படி இருந்தது. மேலும் சிறந்த நடிகர் என்ற அங்கீகாரத்தையும் இத்திரைப்படம் இவருக்கு பெற்றுத்தந்து,வசூல் ரீதியாக சாதனை புரிந்தது. இப்படத்தில் நடித்த தம்பி ராமையாவுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.

பல திரைப்படங்களில்
அஜித்துடன் வீரம் திரைப்படத்தில் அவரின் சகோதரர்களில் ஒருவராக நடித்திருந்தார். முப்பரிமாணம்,ஒரு கிடாவின் கருணை மனு,குரங்கு பொம்மை பில்லா பாண்டி, ஜோதிகாவுடன் காற்றின் மொழி என பல திரைப்படங்களில் நடித்து தனது இடத்தை தொடர்ந்து தக்கவைத்து வருகிறார்.

புதிய படத்தில்
நடிகர் விதார்த் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதார். இப்படத்திற்கான பூஜை அண்மையில் போடப்பட்டது. இப்படத்தை சக்தி வேல் பெரியசாமி இயக்க உள்ளார். ஆல் இன் ஆல் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளது. இதில் கருணாஸ், லஷ்மி பிரியா உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்க உள்ளனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக உள்ளது.

கைவசம் படங்கள்
நடிகர் விதார்த் அக்னி நட்சத்திரம், ஆயிரம் பொற்காசுகள், என்றாவது ஒரு நாள், அன்பறிவு, நட்சத்ரா, கார்பன் என அரைடஜன் படங்களை கைவசம் வைத்து பிஸியாக நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











