விதி - மதி உல்டா... வேற ஒண்ணுமில்ல, ஒரு படத்தோடு பேருதான்!

By Shankar

தமிழ் சினிமாவில் தலைப்பு பஞ்சம் பேயாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. ஏதாவது வித்தியாசமாக இருந்தால்தான் ரசிகனை சட்டென்று திரும்பிப் பார்க்க வைக்க முடியும் என்பதால் விதவிதமாக பெயர்களை யோசிக்கிறார்கள்.

அப்படி வைக்கப்பட்ட ஒரு படத்தின் தலைப்புதான் 'விதி - மதி உல்டா'.

Vidhi - Madhi Ulta

மனித வாழ்க்கையின் நிகழ்வுகள் அனைத்துமே விதிக்குட்பட்டது. விதியை வெல்லக் கூடிய சக்தி மதிக்கு உண்டு. அதுவே உல்டாவாகிவிட்டால் என்ன விபரீதம் ஏற்படும் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

டார்லிங் 2 படத்தின் மூலம் அறிமுகான ரமீஸ் ராஜா இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஜனனி நடிக்கிறார். டேனியல் பாலாஜி, கருணாகரன், சென்ராயன், சித்ரா லட்சுமணன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

அஸ்வின் இசையமைக்கிறார். படத்தை ரமீஸ் ராஜாவே தயாரிக்கிறார். எழுதி இயக்குகிறார் விஜய் பாலாஜி. இவர் ஏ ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

Vidhi - Madhi Ulta

படம் குறித்து அவர் கூறுகையில், "விதி மீது மக்களுக்கு அபார நம்பிக்கை உள்ளது. அந்த விதியை மதியால் வெல்லாம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதனால்தான் இப்படி ஒரு தலைப்பு. வித்தியாசமான கதை, களம். சென்னை, பாண்டிச்சேரி, பெங்களூரில் படப்பிடிப்பு நடத்தினோம். இந்தக் கதைக்கு மிகப் பொருத்தமானவராக இருந்தார் ரமீஸ்ராஜா. கதையைக் கேட்டதும் தானே தயாரிக்கவும் ஒப்புக் கொண்டார்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X