Viduthalai 1: சூரியை கொல்லாமல் விட்ட விஜய் சேதுபதி... விடுதலை 1ல் இதெல்லாம் ஒரு காரணமா பாஸ்!

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த வாரம் வெளியானது.

இந்தப் படத்தில் குமரேசன் என்ற கடைநிலை போலீஸ் கேரக்டரில் சூரி நடித்திருந்தார்.

அதேபோல், பெருமாள் வாத்தி என்ற மக்கள் படையின் தலைவராக விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி - சூரி இருவருக்குமான ஒரு காட்சியின் பின்னணி குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

 Viduthalai 1: An interesting reason why Vijay Sethupathi did not kill Soori in Viduthalai

விஜய் சேதுபதி - சூரி
வெற்றிமாறனின் விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சூரி குமரேசன் என்ற லீடிங் கேரக்டரிலும், விஜய் சேதுபதி பெருமாள் வாத்தி என்ற மக்கள் படை தலைவராகவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் கதை முழுவதும் சூரியின் பார்வையில் இருந்து விவரிக்கப்படுவதாக வெற்றிமாறன் இயக்கியிருப்பார்.

முதல் காட்சியில் இருந்து இறுதிவரை சூரி தனது அம்மாவுக்கு எழுதும் கடிதம் மூலமே கதை சொல்லப்பட்டிருக்கும். குமரேசன் என்ற கடைநிலை காவலரான சூரி, உண்மையின் பக்கம் நின்று என்ன நடந்தது என்பதை கூறுவார். இந்தப் படத்தில் சூரிக்கும் பவானிஸ்ரீக்கும் இடையேயான காதல் காட்சிகள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன. அதேபோல் க்ளைமேக்ஸில் சூரி விஜய் சேதுபதியை விரட்டிப் பிடிக்கும் காட்சியும் ரசிகர்களுக்கு செம்ம ஆக்‌ஷன் ட்ரீட்டாக அமைந்தது.

 Viduthalai 1: An interesting reason why Vijay Sethupathi did not kill Soori in Viduthalai

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி தலைமறைவாக வாழ்ந்து அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பார். போலீஸாருக்கு பெருமாள் வாத்தியான விஜய் சேதுபதி யாரென்றே தெரியாத நிலையில், சூரி மட்டுமே அவரை அடையாளம் கண்டிருப்பார். அதனால், சூரியை கொலை செய்துவிடலாம் என விஜய் சேதுபதியின் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் முடிவெடுப்பார்கள். ஆனால், சூரியை கொலை செய்ய வேண்டாம் என மக்கள் படையினருக்கு ஆர்டர் போட்டிருப்பார் விஜய் சேதுபதி.

இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதை ரசிகர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். ஒரு பாடல் காட்சியில் சூரியும் பவானி ஸ்ரீயும் தியேட்டரில் படம் பார்க்க சென்றிருப்பார்கள். அப்போது இருவரும் பார்வையாலேயே மாறி மாறி தங்களது காதலை பரிமாறிக்கொள்வார்கள். இதனை சூரியின் பின்னால் இருக்கும் விஜய் சேதுபதி கவனிப்பதாக ஒரு காட்சி வரும். ஆனால், அந்த பாடல் காட்சியின் சுவாரஸ்யத்தில் விஜய் சேதுபதி தியேட்டரில் இருப்பதே ரசிகர்களால் கண்டுபிடிக்க முடியாது.

 Viduthalai 1: An interesting reason why Vijay Sethupathi did not kill Soori in Viduthalai

இந்த காட்சி தற்போது வைரலாகி வருவதால், இதனால் தான் சூரியை கொலை செய்ய வேண்டாம் என விஜய் சேதுபதி ஆர்டர் போட்டிருப்பார் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். விடுதலை படத்தின் மொத்த கதையும் சூரியின் கடிதம் மூலம் தான் விவரிக்கப்படுகிறது. அதனால் அவரை கொலை செய்துவிட்டால் கதை எப்படி அடுத்தக்கட்டத்துக்கு நகரும். இதனை ரசிகர்களுக்கு புரிய வைக்கவே வெற்றிமாறன் அந்த காட்சியை வைத்துள்ளார் என விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே விடுதலை முதல் பாகத்தின் வெற்றி விழா, சென்னையில் நடைபெற்றது. வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, தயாரிப்பாளர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த சக்சஸ் மீட்டிங்கிலும் விடுதலை படம் குறித்த பல சுவாரஸ்யங்களை படக்குழுவினர் பகிர்ந்துகொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X