Viduthalai 1: விடுதலை படக்குழுவினரை பாராட்டிய ரஜினி... வெற்றிமாறனுக்கு இப்படி ஒரு பட்டமா!

சென்னை: வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த வாரம் வெளியானது.

விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், விடுதலை திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் வெற்றிமாறன், சூரி, தயாரிப்பாளர் ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

ரஜினியுடன் வெற்றிமாறன், சூரி, தயாரிப்பாளர் எல்ரெட் குமார் அகியோர் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

 Viduthalai 1: Rajinikanth has praised the Vetrimaaran Soori and Viduthalai team

விடுதலை படக்குழுவினரை பாராட்டிய ரஜினி: அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த வாரம் வெளியானது. வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, சேத்தன், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் சூரியின் கேரியரில் மிகப் பெரிய திருப்புமுனை என சினிமா விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ரசிகர்களை கடந்து ஏராளமான சினிமா பிரபலங்களும் விடுதலை படத்தை பாராட்டியுள்ளனர். அந்த வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் விடுதலை படத்தை பார்த்துவிட்டு வியப்பில் ஆழ்ந்துள்ளார். ஜெயிலர் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் ரஜினிக்கு விடுதலை படத்தை தனியாக போட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது. அவருடன் கலைப்புலி எஸ் தாணு, விடுதலை பட தயாரிப்பாளர் எல்ரெட் குமார், வெற்றிமாறன், சூரி ஆகியோரும் உடனிருந்தனர்.

 Viduthalai 1: Rajinikanth has praised the Vetrimaaran Soori and Viduthalai team

விடுதலை படத்தை பார்த்த பின்னர் வெற்றிமாறன், சூரி, எல்ரெட் குமார் மூவரையும் வெகுவாக பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த். முக்கியமாக வெற்றிமாறனின் கைகளை அழுத்தமாக பிடித்துள்ள ரஜினி, அவரை பார்க்கும் அந்த பார்வை 'கலக்கிட்டிங்க... சபாஷ் கண்ணா' என சொல்வதைப் போல உள்ளது. அதேபோல், ரஜினியை பார்த்து கையெடுத்து கும்பிடும் சூரியையும் ஒரு பார்வை பார்க்கிறார் சூப்பர் ஸ்டார். ரஜினியின் இந்தப் பார்வையிலும் சூரியை மனதார வாழ்த்தியதை அறிய முடிகிறது. ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் சூரி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 Viduthalai 1: Rajinikanth has praised the Vetrimaaran Soori and Viduthalai team

இதுகுறித்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள ரஜினி, "விடுதலை இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம்! சூரியின் நடிப்பு - பிரமிப்பு, இளையராஜா - இசையில் என்றும் ராஜா, வெற்றிமாறன் தமிழ்த் திரையுலகின் பெருமை, தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள். இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வெற்றிமாறன், சூரி, தயாரிப்பாளார் எல்ரெட் குமார், கலைப்புலி எஸ் தாணு ஆகியோர் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. வெற்றிமாறன் இயக்கவுள்ள வாடிவாசல் படத்தை கலைப்புலி எஸ் தாணு தான் தயாரிக்கிறார். அவர்தான் ரஜினிக்கு விடுதலை படத்தை போட்டுக் காட்ட ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. ரஜினியுடன் நெருக்கமான நட்பில் இருக்கும் கலைப்புலி எஸ் தாணு தான், சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையே அவருக்கு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

 Viduthalai 1: Rajinikanth has praised the Vetrimaaran Soori and Viduthalai team

விடுதலை திரைப்படம் கடந்த ஒரு வாரத்தில் 35 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது பாகமும் விரைவில் வெளியாக உள்ளதால் ரசிகர்களும் அதிக ஆர்வத்துடன் உள்ளனர். விடுதலை இரண்டாவது பாகத்தில் விஜய் சேதுபதிக்கு தான் அதிகமான காட்சிகள் இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனிடையே விடுதலை படத்தின் சக்சஸ் மீட்டிங் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X