Viduthalai 2: சில்லு சில்லா நொறுக்கிட்டீங்களே.. லீக்கானது விடுதலை 2 கிளைமேக்ஸ்.. செம ஷாக்!

சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான விடுதலை திரைப்படம் வெற்றியை பெற்றது. மேலும், அந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. வெற்றிமாறன் இரண்டாம் பாகத்தை விறுவிறுப்பாக சூட்டிங் செய்து வருகிறார். இந்நிலையில், விடுதலை 2 படத்தின் கிளைமாக்ஸ் குறித்த தகவல்கள் லீக்காகி உள்ளன.

துணைவன் என்கிற நாவலைத் தழுவித் தான் விடுதலை படத்தை வெற்றிமாறன் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. ஆனால் படம் வெளியான போது சோழகர் தொட்டி நாவல் கதையும் அந்தப் படத்தில் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் கிளம்பின.

Viduthalai 2 Climax story leaked in social media?

காமெடி நடிகராக வலம் வந்த சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலைப் படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். முதல் பாகத்தில், சூரி ஹீரோவாக நடித்த நிலையில், இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக போர்ஷன்கள் அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றிமாறனின் விடுதலை: விடுதலை 2 படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் விஜய்சேதுபதியை என்கவுன்ட்டர் செய்யும் பொறுப்பு சூரிக்கே வழங்கப்படுமாம். முதல் பாகத்தின் இறுதியில் தனது காதலியை போலீஸ் நிர்வாணப்படுத்தி அடிக்கும் கொடுமையில் இருந்து காப்பாற்ற விஜய்சேதுபதியை சூரி பிடித்துக் கொடுப்பார்.

அதன், பின்னர் தான் பெருமாள் வாத்தியார் பற்றியும் அவர் ஏன் மக்கள் படையை உருவாக்கினார் என்பதை சூரி அறிந்து கொண்டு அவரை ஃபாலோ செய்ய ஆரம்பிப்பார் என்பது முதல் பாதியின் கிளைமேக்ஸிலேயே காட்டி விட்டனர்.

Viduthalai 2 Climax story leaked in social media?

கிளைமேக்ஸ் இதுதானா: இந்நிலையில், விடுதலை 2 கிளைமேக்ஸில் பெருமாள் வாத்தியாரை சுட சூரிக்கு ஆர்டர் கொடுக்கப்படும் என்றும், அவர் முடியவே முடியாது என மறுக்க, உடனடியாக அருகே இருக்கும் இன்னொரு போலீஸ் அநேகமாக சேத்தன் துப்பாக்கியை எடுத்து பெருமாள் வாத்தியாரான விஜய்சேதுபதியை சுட்டுக் கொன்று விடுவார் என்றும் அந்த கோபத்தில் சூரி சக போலீஸாரை சுட்டுக் கொன்று விட்டு காட்டுக்கு சென்று பெருமாள் வாத்தியாராகவே மாறிவிடுவது தான் விடுதலை 2 படத்தின் கதை என்கின்றனர்.

ஆனால், இதில் நிச்சயம் வெற்றிமாறன் விஷுவல் ட்ரீட் மற்றும் திரைக்கதையில் ட்விஸ்ட் வைத்தே எடுத்திருப்பார் என்றும் கிளைமேக்ஸ் கசிய வாய்ப்பே இல்லை என்றும் கதையை படித்து விட்டு இப்படித்தான் இருக்கும் என்கிற யூகத்தை தான் சமூக வலைதளங்களில் சிலர் இப்படி பரப்பி வருகின்றனர் என வெற்றிமாறன் ரசிகர்கள் உறுதியாக நம்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X