Viduthalai 2 Box Office: 3 நாளில் விடுதலை 2 வசூல் என்ன?.. விஜய் சேதுபதி இன்னொரு செஞ்சுரி அடிப்பாரா?
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கெளதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன், ஆடுகளம் கிஷோர், போஸ் வெங்கட், கென் கருணாஸ், அருள்தாஸ், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை விடுதலை 2 திரைப்படம் வெளியானது. முதல் நாளில் எந்தளவுக்கு வசூல் வேட்டை நடத்தியதோ அதே அளவிலான வசூல் தான் முதல் வாரத்தின் ஒவ்வொரு நாளிலும் விடுதலை 2 பெற்றுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
விடுதலை திரைப்படம் 4.5 கோடிக்குள் எடுக்க திட்டமிட்டு கடைசியாக 65 கோடி வரை பட்ஜெட் எகிறிவிட்டதாக கூறப்பட்டது. ஆனால், அந்த படத்தின் வசூல் வெறும் 60 கோடி மட்டுமே லைஃப் டைம் வசூலாக வந்தது. ஆர்.எஸ். என்ஃபோடைன்மெண்ட் நிறுவனத்துக்கு பெரிய லாபத்தை விடுதலை திரைப்படம் தரவில்லை.

ஆனால், விமர்சன ரீதியாக அந்த படம் பலரையும் கவர்ந்தது. ஆனால், விடுதலை 2 திரைப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. அதன் பட்ஜெட் மற்றும் முதல் 3 நாள் வசூல் குறித்து இங்கே காணலாம்.
விடுதலை 2 பட்ஜெட்: விடுதலை முதல் பாகமே அதிகமாக எடுக்கப்பட்ட நிலையில், விடுதலை 2 படமாக அதனை எடிட் செய்து வெற்றிமாறன் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மேலும், ஒரு வருடம் அந்த படத்துக்கு படப்பிடிப்பு நடத்திய நிலையில், விடுதலை 2 படத்தின் பட்ஜெட் மட்டுமே 35 கோடி என தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் பாகம் 65 கோடி பட்ஜெட் என்கிற நிலையில், ஒட்டுமொத்தமாக 2 பாகத்துக்கும் சேர்த்தால் 100 கோடி செலவாகி இருக்கிறது.
3 நாள் வசூல்: விடுதலை 2 திரைப்படம் முதல் நாளில் 8 கோடி ரூபாய் வரை உலகளவில் வசூல் குவிந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்தியளவில் முதல் மூன்று நாட்களும் தலா 7 கோடி முதல் 7.5 கோடி வசூல் வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என முதல் 3 நாட்களில் இந்தியளவில் 22 கோடி ரூபாய் வசூலும் உலகளவில் 25 கோடி ரூபாய் வசூல் வரை விடுதலை 2 படம் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாரம் ஓடினால் தான்: இரண்டாவது வாரமும் விடுதலை 2 திரைப்படம் தியேட்டர்களில் சிறப்பாக ஓடினால் மட்டுமே 40 முதல் 50 கோடி ரூபாய் வரை லைஃப் டைம் வசூலை இந்த படம் அள்ளும் என்கின்றனர். முதல் பாகத்தை விட அதிக வசூலை விடுதலை 2 பெறுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்றே கூறுகின்றனர். அனைத்து ரசிகர்களையும் கவரும் விதத்தில் படம் இல்லாமல் வெறும் அரசியல் பாடமாகவே போர் அடிப்பதால் வசூலில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
விஜய் சேதுபதிக்கு செஞ்சுரி மிஸ்ஸிங்: மகாராஜா படத்தின் மூலம் டபுள் செஞ்சுரி அடித்த விஜய் சேதுபதி விடுதலை 2 படத்தில் அதே அளவுக்கு உழைப்பை போட்டிருந்தாலும் வசூல் வேட்டை நடத்தாமல் இந்த படம் அண்டர் பர்ஃபார்மன்ஸ் பண்ண ஆரம்பித்துவிட்ட நிலையில், இன்னொரு 100 கோடி வசூலை விஜய் சேதுபதி இந்த வருடம் கொடுக்க வாய்ப்பில்லை என்றே கூறுகின்றனர்.
குறிப்பு: விடுதலை 2 படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சாக்னிக் உள்ளிட்ட பாக்ஸ் ஆபிஸ் வெப்சைட்களில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் தான் இவை.


Click it and Unblock the Notifications











