Viduthalai 2: விடுதலை 2 ஷூட்டிங்கில் இணைந்த சூரி... ரிலீஸ் தேதியை மாற்றிய வெற்றிமாறன்!

சிறுமலை: வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் வெளியானது.

சூரி, விஜய் சேதுபதி, கெளதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

விடுதலை படத்தின் 2ம் பாகம் இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் விடுதலை 2 படப்பிடிப்பை இப்போது தான் தொடங்கியுள்ளார் வெற்றிமாறன்.

 Viduthalai 2 Film’s Shooting Resumed At Sirumalai Hills

விடுதலை 2 படப்பிடிப்பில் சூரி: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, கெளதம் மேனன், சேத்தன், ராஜீவ் மேனன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் விடுதலை. இரண்டு பாகங்களாக உருவான இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் பார்ட், கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் 50 கோடிக்கும் மேல் வசூலித்தது.

மேக்கிங், திரைக்கதை, வசனம் போன்றவைகளில் வழக்கம் போல வெற்றிமாறனின் தனித்துவம் இருந்ததாக ரசிகர்கள் பாராட்டியிருந்தனர். அதேநேரம், தமிழ்நாட்டில் நடந்த உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது என்றும், ஆனால், அதுகுறித்து வெற்றிமாறன் எவ்வித விளக்கமும் படத்தில் கொடுக்கவில்லை எனவும் விமர்சனங்கள் எழுந்தன. இன்னொரு பக்கம் 2ம் பாகம் வெளியானால் தான் விடுதலை படத்தின் நோக்கம் என்னவென்பதை புரிந்துகொள்ள முடியும் எனவும் சொல்லப்பட்டது.

இதனால் 2ம் பாகத்தில் இன்னும் கவனம் செலுத்தி வருகிறார் வெற்றிமாறன். அதாவது ஏற்கனவே விடுதலை படத்தின் 2 பாகங்களும் மொத்தமாக எடுக்கப்பட்டுவிட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், முதல் பாகத்திற்கு அதிக விமர்சனம் எழுந்ததால், இப்போது 2ம் பாகத்தில் பல மாற்றங்கள் செய்ய முடிவெடுத்துள்ளாராம். திரைக்கதை, காட்சிகளில் சில மாற்றங்கள் செய்துள்ள வெற்றிமாறன், அதற்காக மீண்டும் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.

இதனையடுத்து சிறுமலையில் தொடங்கிய விடுதலை 2ம் பாகம் படப்பிடிப்பில் சூரி பங்கேற்றுள்ளார். குமரேசன் என்ற கான்ஸ்டபிளாக நடித்து பரிதாபத்தை வரவைத்த சூரி, 2ம் பாகத்திலும் ஸ்கோர் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விஜய் சேதுபதியின் காட்சிகளையும் திரும்ப எடுக்கவுள்ளாராம் வெற்றிமாறன். மொத்தமாகவே இந்தப் படத்திற்காக நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்திருந்த விஜய் சேதுபதி, பின்னர் கதைக்காக அதிக நாட்கள் நடித்துக் கொடுத்திருந்தார்.

இப்போது மீண்டும் விடுதலை 2ம் பாகத்திற்காக அவர் கால்ஷீட் கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல், 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தொடங்கிய விடுதலை, தயாரிப்பாளருக்கு 40 கோடி வரை செலவை ஏற்றிவிட்டது. இப்போது மீண்டும் நடக்கும் படப்பிடிப்புக்கும் இன்னொரு பட்ஜெட் போடப்பட்டுள்ளதாம். அதேபோல், இந்தாண்டு இறுதியில் வெளியாகவிருந்த விடுதலை 2ம் பாகம், 2024ல் தான் ரிலீஸாகும் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே சிறுமலையில் நடைபெற்று வரும் விடுதலை 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சூரியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X