விடுதலை 2 பட நடிகர்களுக்கு சம்பள பாக்கி.. வெற்றிமாறனை விளாசும் ஊர் மக்கள்.. என்ன ஆச்சு?
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, ராஜீவ் மேனன், கௌதம் மேனன், பவானி ஸ்ரீ, சேத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு விடுதலை திரைப்படம் வெளியானது. அந்த படத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்து கலக்கி இருந்தார். தொடர்ந்து அவர் ஹீரோவாக பல படங்களில் நடிக்க காரணமே வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடித்த விடுதலை திரைப்படம் தான்.
விடுதலை 2 திரைப்படம் சமீபத்தில் வெளிநாடுகளில் நடைபெற்ற விருது விழாக்களில் திரையிடப்பட்டு பல பாராட்டுக்களை பெற்றிருந்தது. ஆனாலும் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னமும் சில நாட்களுக்கு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் விடுதலை 2 திரைப்படத்தில் நடித்த ஊர் மக்களுக்கு சரியான சம்பளத்தை படக்குழுவினர் கொடுக்கவில்லை என்கிற பரபரப்பு குற்றச்சாட்டை தென்காசி பகுதி மக்கள் தற்போது முன்வைத்துள்ளனர்.
விடுதலை கதை: தலைமறைவாக உள்ள வாத்தியாருக்கு ஊர்மக்கள் அனைவரும் ஆதரவு அளிப்பதாக கருதி போலீஸ்காரர்கள் அந்த ஊர் ஆண்களையும் பெண்களையும் அழைத்து வந்து ஆடைகளை உருவி நிர்வாணப்படுத்தி கொடுமை செய்ய அதில் நாயகன் சூரியின் காதலியும் சிக்கித் தவிக்க வாத்தியார் இருக்குமிடம் தனக்கு தெரியும் என சில போலீஸ்காரர்களின் உதவியுடன் அந்த இடத்துக்கு சென்று வாத்தியாரை போலீசாரிடம் பிடித்து கொடுக்கிறார். அத்துடன் முதல் பாகத்தின் கதை முடிகிறது.
இரண்டாம் பாகம்: விடுதலைப் படத்தின் இரண்டாம் பாகத்தில் யார் அந்த வாத்தியார் என்பது குறித்த விரிவான தகவல்களும் மக்களுக்காக அவர் போராடும் போராட்டங்களையும் அறிந்து கொள்ளும் நாயகன் சூரி வாத்தியாருக்கு உறுதுணையாக மாறுகிறாரா இல்லையா என்பதுதான் இரண்டாம் பாகத்தின் கதையாக உருவாக்கப்பட்டு ஒருவராக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பள பாக்கி: குறைந்த பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்ட விடுதலை திரைப்படம் பல ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் அதன் பட்ஜெட் சுமார் 60 கோடிக்கும் மேல் சென்று விட்டதாக வெற்றிமாறன் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். ஆனால், அந்த படத்தில் நடித்த துணை நடிகர்களுக்கு இன்னமும் சம்பள பாக்கி இருப்பதாக தற்போது குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன.
500 ரூபாய் கொடுக்கல: விடுதலை 2 படத்தில் ஏகப்பட்ட ஊர் மக்கள் நடித்திருப்பார்கள் அவர்களுக்கு ஒரு நாள் தினக்கூலியாக 500 ரூபாய் தருவதாக பேசப்பட்ட நிலையில், வெறும் 350 ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளனர். ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகளை அழைத்து வந்த ஏஜெண்ட் உரிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாகவும் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் இந்த விவகாரத்தில் எங்களை கண்டு கொள்ளவே இல்லை என்கிற குற்றச்சாட்டுகளையும் விடுதலை 2 படத்தில் நடித்த துணை நடிகர்கள் அடுக்கி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











