Viduthalai 2 Release - விடுதலை இரண்டாம் பாக ரிலீஸில் தாமதம்?.. சுதாரித்துக்கொண்டாரா வெற்றிமாறன்?

சென்னை: Viduthalai 2 Release (விடுதலை 2 ரிலீஸ்) விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் ரிலீஸில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக கோலிவுட்டில் தகவல் பரவிவருகிறது.

வெற்றிமாறன் இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர். அவரது ஒவ்வொரு படமும் பக்கா டீடெயிலிங்கோடும், சமூக நோக்க கருத்துடனும் வெளியாகி பெரும் உரையாடலை கிளப்புபவை. அப்படி அவர் சமீபத்தில் இயக்கிய படம்தான் விடுதலை. முதல் பாகம் கடந்த 31ஆம் தேதி வெளியானது. சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன், ராஜீவ் மேனன், பவானி ஸ்ரீ, சேத்தன் உள்ளிட்டோர் அப்படத்தில் நடித்திருந்தனர்.

Viduthalai 2 Release Has Been Delay For Some CG Works?

வரவேற்பைப் பெற்ற விடுதலை திரைப்படம்: விடுதலை திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியான நாள் முதலே ரசிகர்கள் அதனை கொண்டாடிவருகின்றனர். விடுதலைக்கு முந்தைய நாள் வெளியான பத்து தல படம் கடும் விமர்சனங்களை சந்திக்க வெற்றிமாறனின் விடுதலை பாசிட்டிவ் விமர்சனங்களையே பெரும்பாலும் பெற்றுவருகிறது. படத்துக்கான தியேட்டர் எண்ணிக்கையும் நாள்கள் செல்ல செல்ல அதிகரிக்கவே செய்தது.

வரவேற்பைப் பெற்றாலும் விமர்சனத்தையும் சந்தித்த விடுதலை: நகசல்பாரி இயக்கங்கள் குறித்து; குறிப்பாக தமிழ்நாட்டில் ஆயுதம் ஏந்திய நக்சல்பாரிகளான தமிழரசன், புலவர் கலியபெருமாள் ஆகியோரின் வாழ்க்கையையும், அவர்கள் செய்த சம்பவங்களையும் வைத்துதான் விடுதலை படம் உருவாக்கப்பட்டிருந்தது. இதனை பலரும் கொண்டாடினர். ஆனால் வெற்றிமாறன் இந்த கதைக்களத்தில் சில இடங்களில் காம்ப்ரமைஸ் ஆகிவிட்டார். தமிழரசன் குறித்தும், புலவர் கலியபெருமாள் குறித்தும் ஒழுங்காக காட்சிப்படுத்தவில்லை என ஒருஅதரப்பினர் விமர்சனத்தையும் முன்வைத்தனர்.

Viduthalai 2 Release Has Been Delay For Some CG Works?

டெம்ப்ளேட்டுக்குள் சிக்கிவிட்டாரா வெற்றிமாறன்?: அதுமட்டுமின்றி காவல் துறையின் கோர முகத்தை விசாரணையிலேயே தோலுரித்துக்காட்டிய வெற்றிமாறன் இந்தப் படத்திலும் அதனை செய்திருக்கிறார். ஆனால் ஒரே டெம்ப்ளேட்டாக இருக்கிறது. முக்கியமாக சூரி துப்பாக்கி எடுத்து சுடும் காட்சிகள் எல்லாம் ஒரு ஹீரோயிசம் போலவே இருக்கின்றன.

விசாரணையில் காவல் துறையினரின் வன்முறையில் பல காட்சிகளில் பதற வைத்த வெற்றிமாறன் இப்படத்தில் ஒருவித சலிப்புத்தன்மையையே கொடுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி காவல் துறை மக்களை சுடும் காட்சியில் எல்லாம் எதற்காக இளையராஜா மாஸாக பிஜிஎம் போட்டிருக்கிறார் எனவும் கேள்வி எழுப்பினர்.

அதேபோல், பெண்களின் நிர்வாண காட்சிகள் பார்ப்பவர்களை கலங்க வைத்து பதைபதைக்க வைத்தாலும் அந்தக் காட்சிகள் சரியான இம்பேக்ட்டை உருவாக்கவில்லை. எனவே தனக்கென்ற ஒரு டெம்ப்ளேட்டை உருவாக்கி அதற்குள் வெற்றிமாறன் சிக்கிக்கொண்டாரோ எனவும் சிலர் குரல் எழுப்பினர்.

Viduthalai 2 Release Has Been Delay For Some CG Works?

விடுதலை 2 ரிலீஸ் எப்போது?: இப்படி சிலர் விமர்சனத்தை எழுப்பினாலும் விடுதலை படத்தை பலரும் கொண்டாடவே செய்கின்றனர். மேலும், எப்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் வரும் எனவும் காத்திருக்கின்றனர். அந்த பாகமானது இன்னும் நான்கு மாதங்களில் வெளியாகும் என முதலில் கூறப்பட்டது. ஆனால் விடுதலை இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் ஒன்று இப்போது வெளியாகியிருக்கிறது.

விடுதலை 2 ரிலீஸில் தாமதம்?.. சுதாரித்துக்கொண்டாரா வெற்றிமாறன்?: அதாவது விடுதலை 2 டிசம்பர் மாதம்தான் ரிலீஸ் ஆகவிருக்கிறது. படத்தில் சிஜி வேலைகள் இன்னமும் பாக்கி இருப்பதால்தான் இந்த் தாமதம் என கூறப்படுகிறது. அதேசமயம், விடுதலை முதல் பாகத்திற்கு விமர்சனங்கள் வரும் என்று வெற்றிமாறன் எதிர்பார்க்கவில்லை. எனவே இரண்டாம் பாகத்தை இன்னமும் செம்மையாக்கி முதல் பாகத்திற்கு கிடைத்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கவே வெற்றிமாறன் சுதாரித்து ரிலீஸை தாமதமாக்கியிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X