Viduthalai 2 X Review: விடுதலை 2 ட்விட்டர் விமர்சனம்.. வெற்றிமாறனின் வேறலெவல் சம்பவம்!
சென்னை: அசுரன் படத்தில் தனுஷை எப்படி பார்த்து ரசிகர்கள் மிரண்டார்களோ அதை விட டபுள் மடங்கு விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதியின் ருத்ர தாண்டவத்தை ரசிகர்கள் காணப்போவதாக ட்விட்டர் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, சேத்தன், பவானி ஸ்ரீ, கெளதம் மேனன் மற்றும் ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான விடுதலை முதல் பாகத்தில் ஆரம்பத்தில் வரும் அந்த நீண்ட நெடிய சிங்கிள் ஷாட் ரயில் விபத்துக் காட்சியே ரசிகர்களை மிரள வைத்திருக்கும்.

பெருமாள் வாத்தியார் யார் என்றே தெரியாமல் அவரை சந்திக்கும் கான்ஸ்டபிள் குமரேசன் போலீஸ் படையாலேயே பிடிக்க முடியாத பெருமாள் வாத்தியாரை தனியாளாக ஒரு சின்ன டீமுடன் போராடி பிடித்துக் கொடுப்பதுடன் முதல் பாகம் முடிந்திருக்கும். இந்நிலையில், 2ம் பாகத்தில், பெருமாள் வாத்தியார் யார்? ஒரு சாதாரண கூலித் தொழிலாளி எப்படி புரட்சி வீரராக மாறுகிறார் என்கிற கதையை வெற்றிமாறன் இயக்கிய நிலையில், இன்று அந்த படம் ரசிகர்களுக்காக வெளியாகிறது.
கடைசி நேரம் வரை: விடுதலை முதல் பாகம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான நிலையில், அதன் 2ம் பாகம் இந்த ஆண்டு டிசம்பர் 20ம் தேதி ரிலீஸ் ஆகிறது. 4 நாட்கள் விஜய் சேதுபதியை நடிக்க அழைத்து அவரை வைத்து இன்னொரு பாகத்தையே எடுக்கும் அளவுக்கு படத்தை ஆழமாக்கி உள்ளார் வெற்றிமாறன். விடுதலை 2 இடைவேளை முடிவதற்குள் 2ம் பாகத்தை எடிட் செய்து தருகிறேன் என வெற்றிமாறன் சொல்வது போல கடைசி நேரம் வரை அவர் அந்த படத்துக்காக வேலை பார்த்ததை மீம் போட்டு கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர். நேற்று இரவு கூட 8 நிமிடக் காட்சிகளை நீக்கி ரசிகர்களுக்கு ரொம்பவே க்ரிஸ்ப்பாக விடுதலை 2 படத்தை கொடுக்க பணியாற்றியுள்ளார் வெற்றிமாறன்.

படம் பார்த்த ரசிகர் ஒருவர் படத்தின் முதல் பாதி சூப்பர், படம் ஆரம்பித்த 30 நிமிடங்கள் அருமை. விஜய்சேதுபதி டயலாக்ஸ், ஆக்ஷன்ஸ் பக்கா மற்றும் புரட்சி அதிகம் என அனைத்திலும் சும்மா தெறிக்கவிட்டுவிட்டார். படம் சுவாரசியமே குறையாமல் சும்மா மிரட்டலாக இருக்கு, விடுதலை 2 சூப்பர் என படத்தை கொண்டாடி உள்ளார்.
விடுதலை 2 படத்தின் க்ளைமாக்ஸ் பிளாஸ்ட் பண்ணிவிட்டார் இயக்குநர். அந்த படத்தை தியேட்டரில் பார்ப்பது சொல்ல முடியாத அளவிற்கு நல்ல அனுபவமாக இருந்தது. அதுவும் இளையராஜாவின் இசை பிளாக்பஸ்டர். பல காட்சிகள் தத்துரூபமாக இருக்கு. படம் நிச்சயம் பிளாக் பஸ்டர் தான் என பாராட்டி உள்ளார்.
கல்ட் கிளாசிக்: விஜய் சேதுபதியின் இன்னொரு முகத்தை விடுதலை 2 படத்தின் மூலம் பார்க்கலாம். மனுஷன் அந்தளவுக்கு நடிப்பில் மிரட்டியிருக்காரு. வெற்றிமாறனுக்கு மீண்டும் ஒரு தேசிய விருது படமாக விடுதலை 2 அமையும் என்று இந்த நெட்டிசன் பதிவிட்டுள்ளார். விடுதலை 2 படத்தை கல்ட் கிளாசிக் எனக் கூறியுள்ள நிலையில், படத்தை பார்க்காமலே விமர்சனம் போடுறியான்னு கமெண்ட்டில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

விடுதலை 2 நாள்: அதிகாரத்துக்கு எதிரான மக்களின் குரலாக விடுதலை 2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ஒலிக்க காத்திருக்கிறது. இன்றைய தினம் விடுதலை 2 தினம் என ரசிகர்கள் அந்த படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், காலை 9 மணி முதல் விடுதலை 2 திரைப்படம் வெளியாகிறது. மகாராஜா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விடுதலை 2 திரைப்படமும் விஜய் சேதுபதிக்கு வெற்றி மகுடத்தை சூட்டும் என்றும் கருடன் படத்திற்கு பிறகு சூரிக்கு ஒரு சூப்பரான படமாக விடுதலை 2 இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விடுதலை 2 படம் குறித்த முழுமையான விமர்சனம் விரைவில் வந்துவிடும்.



Click it and Unblock the Notifications











