எச். வினோத் சொன்னது உண்மை தான் போல.. விடுதலை vs பத்து தல.. பாக்ஸ் ஆபிஸ் உருட்டல்கள்!
சென்னை: ஹீரோக்களை குஷிப்படுத்தவும் தங்கள் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்துக்கு ஹைப் ஏற்றவும் தயாரிப்பாளர்கள் சமீப காலமாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை போலியாக சொல்லி வருவதாக சினிமா டிராக்கர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
படம் வெளியாகி 22 நாட்கள் ஆகும் போதே வெற்றிகரமான 25வது நாள் என போஸ்டர் ஒட்டுவதை போல தற்போது படம் வெளியானாலே போதும் வெற்றிவிழாவை தயாரிப்பாளர்கள் ஹீரோக்களின் அழுத்தம் காரணமாக கொண்டாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர்.

கடந்த வாரம் வெளியான சிம்புவின் பத்து தல மற்றும் சூரியின் விடுதலை இரு படங்களுமே வசூல் ரீதியாக பெரிய அடி வாங்கி இருக்கிறது என்றும் ஆனால், அந்த படங்களை தயாரித்தவர்கள் பிளாக்பஸ்டர் ஹிட் போல வெற்றி விழாக்களை கொண்டாடி வருவது ஏமாற்று வேலை என சினிமா விமர்சகர்களும் சாடி வருகின்றனர்.
பத்து தல வசூல் :
இயக்குநர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான பத்து தல படம் சிம்பு படமாக ப்ரமோட் செய்யப்பட்ட நிலையில், முதல் நாளில் மட்டும் வசூல் வந்ததாகவும் அதன் பின்னர் படத்துக்கான வசூல் மொத்தமாக அடி வாங்கியதாகவும் கூறுகின்றனர். முதல் நாள் மட்டும் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்ட ஸ்டூடியோ க்ரீன் அதன் பின்னர் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், சிம்பு கரியரிலேயே அதிக வசூல் ஈட்டிய படம் பத்து தல என ஞானவேல் ராஜா சமீபத்தில் அறிவித்துள்ளார்.

விடுதலை நிலவரம் என்ன?
பத்து தல படத்துக்கு பிறகு அடுத்த நாள் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ நடிப்பில் வெளியான விடுதலை திரைப்படம் வெள்ளிக்கிழமை சாதாரண ஓபனிங் ஆன நிலையில், பாசிட்டிவ் விமர்சனங்கள் மூலம் சனி, மற்றும் ஞாயிறு நல்ல வசூல் ஈட்டியதாகவும், திங்கட்கிழமை முதல் தியேட்டர்கள் காத்து வாங்க தொடங்கி விட்டதாக கூறுகின்றனர். ஆனால், அந்த படத்திற்கும் தயாரிப்பு நிறுவனம் வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக கூறுகின்றனர்.
எச். வினோத் சொன்னது தான் சரி:
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் எச். வினோத் கடந்த சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியில் தயாரிப்பாளர்கள் போலியான பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் சொல்லும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என வெளிப்படையாக பேசியிருந்தார். அவர் சொன்னதை போலத்தான் இப்போ சினிமாவில் நடக்குது என்கின்றனர்.

தவறான நேரம்:
பத்து தல மற்றும் விடுதலை படங்களுக்கு பெரிய சிக்கலாக அமைந்தது அதன் ரிலீஸ் நேரம் தான் என்றும் இறுதித் தேர்வுகள் மாணவர்களுக்கு நடந்து வருவது மற்றும் ஐபிஎல் போட்டிகள் ஆரம்பித்து இருக்கும் நேரத்தில் வெளியான படங்களை பார்க்க ரசிகர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை எனக் கூறுகின்றனர். படம் நல்லாவே இருந்தாலும், பள்ளிகள் விடுமுறை நேரத்திலும் பண்டிகை விடுமுறை நாட்களிலும் டார்கெட் செய்து வெளியிட்டு இருந்தால் உண்மையான வெற்றியையே தயாரிப்பாளர்கள் கொண்டாடலாம் என்றும் கூறுகின்றனர். ஆனால், தயாரிப்பாளர்கள் படம் ரிலீஸ் ஆனாலே நாங்க பிசினஸ் பண்ணி லாபம் பார்த்து விடுவோம் என்கிற கணக்கில் வெற்றி விழாக்களை கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











