Viduthalai HD leaked: ஓடிடியிலேயே இன்னும் வெளியாகல.. அதுக்குள்ள லீக்கான விடுதலை, பத்து தல!

சென்னை: மார்ச் இறுதியில் வெளியான சிம்புவின் பத்து தல மற்றும் சூரியின் விடுதலை படங்கள் ஓடிடியில் வெளியாக இன்னும் ஒரு மாத காலம் உள்ள நிலையில், அதற்குள் அதன் HD பிரின்ட்டுகள் இணையத்தில் லீக் ஆகி படக்குழுவினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

தியேட்டரில் வெளியான பத்து தல மற்றும் விடுதலை படங்களுக்கு ஆரம்பத்தில் நல்ல ஓபனிங் இருந்தாலும், போக போக அந்த படங்களின் வசூல் பெரும் சரிவை சந்தித்தததாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், பத்து தல படம் தான் சிம்புவின் கரியரிலேயே விண்ணைத்தாண்டி வருவாயா, மாநாடு படங்களை விட அதிகம் என்பது போல அந்த படத்தின் தயாரிப்பாளர் சொல்லி உள்ளார்.

Viduthalai and Pathu Thala movie HD Print leaked in piracy websites before its OTT release

வெற்றி கொண்டாட்டம்: அதே போல விடுதலை படத்திற்கும் சக்சஸ் பார்ட்டி வைத்து படக்குழுவினர் கிடைத்த பாராட்டுக்களை வைத்து தங்கள் கொண்டாட்டத்தை விமர்சையாக கொண்டாடி உள்ளனர். தியேட்டருக்கு சென்று குடும்பத்துடன் விடுதலை படத்தை பார்க்க முடியாத ரசிகர்கள் ஓடிடியில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அந்த நிர்வாணக் காட்சிகள் எல்லாம் பிளர் பண்ணாமல் போடுவார்களா? என்றும் இளைஞர்கள் ரொம்பவே எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால், அந்த காட்சிகளே சீட் ஷாட்டாக ஸ்கின் டிரெஸ் போடப்பட்டுத் தான் எடுக்கப்பட்டதாக சேத்தன் தனது பேட்டியில் அந்த சீக்ரெட்டையும் உடைத்து விட்டார்.

விடுதலை ஓடிடி ரிலீஸ்: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி, பவானி ஸ்ரீ, கவுதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் நடிப்பில் மார்ச் 31ம் தேதி வெளியான விடுதலை படம் எக்ஸ்டன்டட் வெர்ஷனாக ஓடிடியில் வரும் ஜூன் மாதம் ஜீ5 ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Viduthalai and Pathu Thala movie HD Print leaked in piracy websites before its OTT release

பத்து தல ஓடிடி ரிலீஸ்: கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் மேனன், பிரியா பவானி சங்கர், கவுதம் கார்த்திக், சாயிஷா நடிப்பில் மார்ச் 30ம் தேதி வெளியான பத்து தல திரைப்படம் வரும் மே மாதம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

HD பிரின்ட் லீக் ஆகிடுச்சு: ஆனால், அதற்கு முன்னதாக பத்து தல மற்றும் விடுதலை படங்களின் ஹெச்டி பிரின்ட்டுகள் பைரஸி வெப்சைட்டுகளில் லீக் ஆகி இளைஞர்களால் அதிகப்படியாக டவுன்லோடு செய்யப்பட்டு இப்போதே ஏகப்பட்ட வீடுகளில் ஓடிக் கொண்டிருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால், தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி ஆவார்களோ தெரியவில்லை. ஆனால் அதிக தொகைக்கு ஓடிடியில் படத்தை வாங்கியவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X