Viduthalai Box Office: இரண்டு நாட்களில் விடுதலை கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?
சென்னை: Viduthalai Box Office (விடுதலை பாக்ஸ் ஆபிஸ்) விடுதலை திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் 13 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
வெற்றிமாறன் இந்திய அளவில் பிரபலமான இயக்குநர் ஆவார். அவர் இயக்கிய ஒவ்வொரு படமும் வெவ்வேறு களத்தை மையமாக வெளியானவை. கமர்ஷியலாக தனது பயணத்தை ஆரம்பித்தாலும் காலம் செல்ல செல்ல தனது பாதையை மாற்றிக்கொண்டார் அவர்.

வெற்றிமாறனின் விடுதலை
வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தை இயக்கியிருக்கிறார். சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, ராஜீவ் மேனன், கௌதம் மேனன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். மார்ச் 31ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது விடுதலை. இளையராஜா இசையமைத்திருக்கிறார். எல்ரெட் குமார் படத்தை தயாரித்திருக்கிறார். ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை தீமாக வைத்து இந்தப் படம் உருவாகியிருக்கிறது.

விடுதலைக்கு கிடைத்த வரவேற்பு
எந்தப் படத்தை எடுத்தாலும் டீட்டெயிலிங்கோடு வெற்றிமாறன் தருவதால் இப்படத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக விடுதலை படத்தின் ஒவ்வொரு காட்சியும் இருக்கிறது. குறிப்பாக மக்கள் படை என்ற அமைப்பை வெற்றிமாறன் தெளிவாகவே தொட்டிருக்கிறார்.அதுமட்டுமின்றி காவல் துறையின் குரூர முகத்தை விசாரணைக்கு பிறகு மீண்டும் வெளிச்சப்படுத்தியிருக்கிறார் என பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள்.

நடிப்பில் பின்னிய சூரி
கதையின் நாயகனாக சூரி நடித்திருக்கிறார். குமரேசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அவர், மக்களுக்கும், காவல் துறைக்கும் இடையில் சிக்கிக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பும்படி வெளிப்பட்டிருக்கும் அவரது நடிப்பு பரவலான பாராட்டை பெற்றுவருகிறது. அதேபோல், ஆக்ஷன் காட்சிகளிலும் கடுமையான ரிஸ்க்குகளை எடுத்திருக்கிறார். இதனால் சூரிக்கு இப்படம் பெரும் அடையாளமாக மாறியிருக்கிறது.

இளையராஜாவின் இசை
படத்தின் மேக்கிங், சூரியின் நடிப்பு மட்டுமின்றி இளையராஜாவின் இசையும் அருமையாக அமைந்திருக்கிறது. சில இடங்களில் சைலென்ஸ் விட்டும், பல இடங்களில் கூஸ்பம்ப்ஸ் ஏற்படக்கூடிய இசையையும் வாரி வழங்கியிருக்கிறார் இசைஞானி இளையராஜா. வெற்றிமாறனுடன் அவர் முதல்முதலாக கூட்டணி அமைத்து தரமான செய்கையை செய்திருக்கிறார் எனவும் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். முதல் பாகத்திலேயே இரண்டாம் பாகத்திற்கான க்ளிம்ப்ஸும் இருப்பதால் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்களிடம் ஆவலும் எழுந்திருக்கிறது.

பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு?
இப்படி விடுதலை படம் விமர்சன ரீதியாக பெரும்பாலானோரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி வசூலிலும் நல வரவேற்பைப் பெற்ற படம் முதல் நாள் மட்டும் 6.5 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் இரண்டு நாட்களில் விடுதலை படம் எவ்வளவு கலெக்ஷன் செய்திருக்கிறது என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி, விடுதலை படமானது இரண்டு நாட்கள் முடிவில் 13 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











