CM விஜய் வருகிறார்னு சோபா வாங்கினோமா? எக்ஸ் தளத்தில் விளாசி விட்ட விசிக

சென்னை: கடந்த 10ஆம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததால், திமுக அல்லாத திமுக கூட்டணிக் கட்சியினர் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்தார். இதில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் எடுக்கும் முடிவு மிகவும் முக்கியமான முடிவாக இருந்தது. இப்படி இருக்கையில் கடந்த 9ஆம் தேதி தனது முடிவுகளை அறிவிப்பதாக அவர் தெரிவித்திருந்த நிலையில், விசிக கட்சி அலுவலகத்திற்கு, அன்றைய தினத்தில் புதிய சோபாக்கள் வந்திறங்கியது. இது பேசு பொருளானது.

குறிப்பாக இந்த சோபா வாங்கப்பட்டதற்கும் விஜய்க்கும் முக்கிய காரணம் உண்டு என்று எல்லாம் பலரும் பதிவிட்டனர். தற்போது ஒரு வாரம் ஆகியும் இணையத்தில் இது தொடர்பான பேச்சுக்கள் மிகவும் எல்லை மீறிச் சென்று கொண்டு இருப்பதால் விடுதலைச் சிறுத்தைகள் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, " விசிக அம்பேத்கர் திடல் அலுவலகத்தில் நீண்ட நாட்களாக பராமரிப்பு வேலைகள் நடைபெற்று அவை முடிவடைந்த நிலையில் அலுவலக பயன்பாட்டிற்கு புதிய சோபாக்கள் வாங்கப்பட்டது!

ஆனால் சோபா குறித்து சமூக வலைதளங்களில் கிளம்பிய கிண்டல்கள் முட்டாள்தனமானது!

Viduthalai Chiruthaigal Katchi Slams Viral Sofa Trolls Linked to CM Vijay Visit Rumours

இதற்கும் தலைவர்
விளக்கமளிக்க வேண்டிய
தேவை தவிர்க்க இயலாதது
வேதனை தருவது!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைவர்

திருமாவளவன் அவர்களை சந்திக்க வரப்போகிறார் என்ற செய்திகள் பரவிய நேரத்தில் அந்தச் சோபாக்கள் அலுவலகத்திற்கு வந்தன.

இதனால் விஜய்க்கு அமர வைப்பதற்காகவே விசிக அலுவலகத்தில் ஸ்பெஷலாக சோபாக்கள் தயார் செய்யப்படுகின்றன என்று பலரும் கிண்டல் செய்தனர்!

​ஒரு கட்சியின் அலுவலகத்திற்குத் தேவையான பொருட்கள் (Furniture) வாங்குவது என்பது அவர்களின் நிர்வாகம் சார்ந்த விஷயம்.

ஆனால் அதை மற்றொரு நடிகரோ அல்லது அரசியல் தலைவரோ வரப்போகிறார்கள் என்பதோடு முடிச்சுப் போட்டு விஜய்க்காகத்தான் இதெல்லாம் நடக்கிறது என்று தரம் தாழ்த்தி பேசியது தரங்கெட்ட அரசியல்!!!

​எளிய மக்களுக்காக இயங்கும் ஒரு கட்சியின் அலுவலகத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதை கூட அரசியல் உள்நோக்கத்துடன் கிண்டல் செய்வது முறையற்றது !!

​அரசியல் களத்தில் ஒரு கட்சியின் செயல்பாடுகளை விட
அவர்கள் அலுவலகத்திற்கு வாங்கும் பொருட்கள் கூட இவ்வளவு பெரிய விவாதத்திற்குள்ளாவது வியப்பாகவும் அதே சமயம் தரம் தாழ்ந்த விமர்சனமாகவும்
உள்ளது!

Viduthalai Chiruthaigal Katchi Slams Viral Sofa Trolls Linked to CM Vijay Visit Rumours

கோடிக்கணக்கில்
சொத்துக்களும்
பல ஆடம்பர பங்களாக்களும் உள்ளவர்களை கேள்வி கேட்காத இச்சமூகம்
எளியவர்கள் சாதாரண ஒரு சோபா வாங்குறதையும்
ஷூ போடுவதையும்
கூட அரசியலாக பார்ப்பது வேடிக்கை!

இது ஆரோக்கியமான
அரசியல் அல்ல!

அப்படியே கழிப்பறையில்
பக்கெட் விளக்குமாறு
எல்லாத்தையும்
கணக்கெடுத்துட்டு போங்க!

அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதைக்கூட
அரசியலாக்குவது
அரசியல் நாகரீகம்
அல்ல!" என்று பதிவிட்டுள்ளது. இவர்களின் இந்த பதிவு தற்போது இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X