விடுதலை கேமராமேன் மீது பயங்கர கடுப்பான சூரி.. இசை வெளியீட்டு விழாவிலேயே இப்படி பேசிட்டாரே!

சென்னை: வேலையில்லா பட்டதாரி படத்தை இயக்கிய பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தான் தொடர்ந்து வெற்றிமாறன் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி, கவுதம் மேனன் மற்றும் பவானி ஸ்ரீ நடிப்பில் உருவாகி உள்ள விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

அதில், பங்கேற்று பேசிய கதையின் நாயகன் சூரி ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் மீது உள்ள கடுப்பை கொட்டித் தீர்த்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

7 மில்லியன் வியூஸ்

7 மில்லியன் வியூஸ்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மார்ச் 8ம் தேதி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இசையமைப்பாளர் இளையராஜா, சூரி, விஜய்சேதுபதி, ஹீரோயின் பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். விடுதலை படத்தின் ட்ரெய்லர் தரமான சம்பவம் செய்த நிலையில், யூடியூபில் இதுவரை 7.2 மில்லியன் பார்வைகளை கடந்து டிரெண்டாகி வருகிறது.

சூரி பேச்சு

சூரி பேச்சு

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விடுதலை படத்தின் ஹீரோ சூரி ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னை வைத்து செய்த தரமான சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். அதனை கேட்ட ரசிகர்கள் என்ன சூரி இப்படி ஓபனா பேசிட்டாரே என வியப்பில் ஆழ்ந்துள்ளனர். விடுதலை படத்தின் ட்ரெய்லரில் சூரியின் கடுமையான உழைப்பை பார்த்த ரசிகர்கள் இது சூரி 2.0 என்றும் பாராட்டி வருகின்றனர்.

விஐபி இயக்குநர்

விஐபி இயக்குநர்

தனுஷின் பரட்டை என்கிற அழகுசுந்தரம் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமான வேல்ராஜ், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஆடுகளம், வடசென்னை, அசுரன் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த வேல்ராஜ் தனுஷின் வேலையில்லா பட்டதாரி மற்றும் தங்கமகன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது விடுதலை படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வேல்ராஜ் மீது கடுப்பு

வேல்ராஜ் மீது கடுப்பு

விடுதலை படத்தில் சூரியை அப்படி செம மாஸாக காட்டிய ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்த சம்பவத்தை சொல்லி அவர் மீது தனக்கு இருந்த கடுப்பை மேடையிலேயே வெளிப்படுத்தி விட்டார் நடிகர் சூரி. அவர் சொன்ன அந்த குட்டி ஸ்டோரி இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

சூரியின் ரசிகை

சூரியின் ரசிகை

படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சூரியை காண வயதான ஒரு பாட்டி தினமும் வந்து போவதாகவும், நீங்க அவங்கள பார்க்க வேண்டும் என வேல்ராஜ் சூரியிடம் கோரிக்கை வைத்துள்ளார். நமக்கு ஒரு வயதான ரசிகையா கண்டிப்பா பார்க்க வேண்டும் என நினைத்த சூரி மறுநாள் ஷூட்டிங்கிற்கு சீக்கிரமே வந்திருக்கிறார். ஆனால், அன்று அந்த பாட்டி வரவில்லை. தொடர்ந்து அந்த பாட்டியை சந்திக்க சூரி நினைத்தாலும் அவரை பார்க்க முடியவில்லையாம்.

பாட்டி வீடு இங்க தான் இருக்கு

பாட்டி வீடு இங்க தான் இருக்கு

அந்த பாட்டியின் வீடு தெரு முனையில் தான் இருக்கு போய் சென்று பாருங்க சூரி என வேல்ராஜ் அனுப்பி வைக்க, சூரியும் ஆசையுடன் போய் பார்த்திருக்கிறார். சூரி வந்ததை அறிந்ததும் கஞ்சி குடித்துக் கொண்டிருந்த அந்த பாட்டி எச்சில் கையுடனே ஓடி வந்து கட்டித் தழுவி சூரியை கொஞ்சிவிட்டு என்ன படத்துல கலரா இருக்கீங்க, நேர்ல கருப்பா இருக்கீங்க என கேட்டு இருக்கிறார்.

சிவகுமார் மகன் இல்லையா

சிவகுமார் மகன் இல்லையா

பின்னர் உங்க அப்பான்னா எனக்கு ரொம்ப உசுரு அவர் நடித்த ரோசாப்பூ ரவிக்கைக்காரி உள்ளிட்ட படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் என நடிகர் சிவகுமார் பற்றி பாட்டி சொல்லவும், அப்போ என்ன சூர்யான்னு நினைச்சிட்டு இருந்திருக்காரா அந்த பாட்டி என புரிந்து கொண்ட சூரி, அப்பத்தா நான் சூர்யா இல்லை, சூரி என சொன்னதுமே பட்டென உள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டு போய்விட்டாராம்.

சிரித்த வேல்ராஜ்

சூரிக்கும் சூர்யா சாருக்கும் வித்தியாசம் தெரியாமல் என்னை கோர்த்து விட்டுட்டாரே வேல்ராஜ் என ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அவரை தேடிக் கொண்டு வந்தால், மனுஷன் என்ன உங்க ஃபேன் எப்படி கவனிச்சாங்க என கேட்டு செம கலாய் கலாய்த்து சிரித்து விட்டார் மனுஷன் என நகைச்சுவையாக பேசி அரங்கையே சிரிப்பலையில் ஆழ்த்தினார் சூரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X