Viduthalai: மஹாராஜா அவதாரம் எடுக்கும் விடுதலை வாத்தி... விஜய் சேதுபதியின் புதிய இயக்குநர் இவரா?
சென்னை: விஜய் சேதுபதியின் கைவசம் ஏராளமான படங்கள் வரிசைக் கட்டி உள்ளன.
தற்போது இந்தியில் அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து மணிகண்டன் இயக்கத்தில் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், விஜய் சேதுபதியின் 50வது படம் குறித்து புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

மஹாராஜா அவதாரம் எடுக்கும் விடுதலை வாத்தி
விஜய் சேதுபதியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான விடுதலை படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. வெற்றிமாறன் இயக்கிய இந்தப் படத்தில் பெருமாள் வாத்தி என்ற கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். அவருடன் சூரி, பவானி ஸ்ரீ, கெளதம் மேனன் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
கடைசி விவசாயி, மாமனிதன், விக்ரம், ஃபார்ஸி வெப் சீரிஸ், இப்போது விடுதலை என ஒவ்வொரு படத்திலும் வெரைட்டியாக நடித்து மாஸ் காட்டினார். இன்னொரு பக்கம் இந்தியில் அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து வருகிறார். அதேபோல், காந்தி டாக்ஸ், மெர்ரி கிறிஸ்துமஸ், மும்பைகார் போன்ற படங்களிலும் விஜய் சேதுபதி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குறுகிய காலத்தில் தனது 50வது படத்தில் நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி. ஏற்கனவே மணிகண்டன் இயக்கும் வெப் சீரிஸில் கமிட்டாகியுள்ள விஜய் சேதுபதி, அடுத்து தனது 50வது படத்தின் இயக்குநரையும் ஓக்கே செய்துவிட்டாராம். அதுமட்டும் இல்லாமல் இந்தப் படத்தின் டைட்டிலும் கன்ஃபார்ம் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

அதன்படி, விஜய் சேதுபதியின் 50வது படத்தை நித்திலன் சுவாமிநாதன் இயக்கவுள்ளார். விதார்த், பாரதிராஜா நடிப்பில் 2017ம் ஆண்டு வெளியான குரங்கு பொம்மை படம் மூலம் கவனம் ஈர்த்தவர் நித்திலன் சுவாமிநாதன். தற்போது தனது அடுத்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணையவுள்ளார். விஜய் சேதுபதி - நித்திலன் சுவாமிநாதன் இணையும் இந்தப் படத்திற்கு மஹாராஜா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாம்.
விடுதலை படத்தில் பெருமாள் வாத்தியாராக மிரட்டிய விஜய் சேதுபதி, அடுத்து மஹாராஜாவாக அவதாரம் எடுக்கவுள்ளார். விடுதலை முதல் பாகத்தில் விஜய் சேதுபதியின் போர்ஷன் குறைவாகவே இருந்தது. ஆனால், இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி தான் மாஸ் காட்டுவார் என சொல்லப்படுகிறது. விடுதலை படம் மூலம் மார்க்கெட் இன்னும் உச்சம் தொட்டுள்ளதால், அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறாராம் விஜய் சேதுபதி.


Click it and Unblock the Notifications











