Viduthalai movie : விடுதலை படத்தின் மொத்த வசூல் இவ்வளவா? தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

சென்னை : நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த மாதம் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது விடுதலை படம்.

இந்தப் படத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கியிருந்த நிலையில், ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடினர். படத்தின் மேக்கிங் அனைவரையும் வெகுவாக கவர்ந்து சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது.

படம் வெளியாகி 11 நாட்களை கடந்த நிலையில் இந்தப் படம் தொடர்ந்து விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது.

Viduthalai movie collections crosses 40 crore rupees in just 11 days

விடுதலை படத்தின் வசூல் : நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் மேனன், சேத்தன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த மாதம் 31ம் தேதி வெளியான படம் விடுதலை. இயக்குநர் வெற்றிமாறனின் கைவண்ணத்தில் உருவாகியிருந்த இந்தப் படம் அதிகமான எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில், அந்த எதிர்பார்ப்புகளை சிறப்பாக பூர்த்தி செய்துள்ளது. சூரி என்ற காமெடி நடிகரிடம் இருந்த சிறப்பான குணச்சித்திர கேரக்டரை இந்தப் படம் அழகாக வெளிப்படுத்தியுள்ளது.

இரண்டு பாகங்களாக உருவாகவுள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் தற்போது வெளியாகியுள்ள நிலையில், இன்னும் 4 மாதங்களில் படத்தின் அடுத்த பாகத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் 10 நாட்கள் சூட்டிங் மீதமுள்ளதாகவும் விரைவில் அதையும் முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளை துவக்கவும் வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார்.

Viduthalai movie collections crosses 40 crore rupees in just 11 days

படத்தில் இளையராஜாவின் இசை மிகப்பெரிய பலத்தை கொடுத்துள்ளது. 1500க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ள இளையராஜா, இந்தப் படத்திலும் தன்னுடைய மேஜிக்கை சிறப்பாக செய்துள்ளார். கதையோடு இணைந்து அவரது பாடல்கள் சிறப்பான அனுபவத்தை கொடுக்கிறது. வேல்ராஜின் கேமராவும் காடு, மலை, இரவு, பகல் அனைத்தையும் சிறப்பாக படம் பிடித்துள்ளது. இந்தப் படத்தில் சூரி மிகச்சிறந்த பலம்.

அதேபோல விஜய் சேதுபதிக்கு முதல் பாகத்தில் நடிக்க அதிகமான காட்சிகள் இல்லை என்றபோதிலும், அவர் இந்தப் படத்தில் குறைந்த காட்சிகளிலேயே மிரட்டியுள்ளார். மொத்தத்தில் படத்தில் கேரக்டர் தேர்வு, திரைக்கதை உள்ளிட்டவற்றில் தன்னுடைய சிறப்பை அனைவரையும் கவரும்வகையில் வெற்றிமாறன் வெளிப்படுத்தியுள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இரண்டாவது பாகத்தின் கதைக்களம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Viduthalai movie collections crosses 40 crore rupees in just 11 days

படம் வெளியாகி 11 நாட்களை கடந்த நிலையில், தமிழகத்தில் மட்டுமே படம் இதுவரை 33 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சர்வதேச அளவில் 40 கோடிகளுக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படம் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருவதால் இந்த வசூல் மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கதைக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வெளியாகும் இத்தகைய படங்களுக்கு மக்கள் கொடுத்துவரும் ஆதரவு நம்பிக்கையளிக்கும் வகையில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X