மார்ச் 31ல் விடுதலை ரிலீஸ் - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு - பட்டையை கிளப்பும் போஸ்டர்
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருக்கும் விடுதலை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் ஆகிய படங்களை இயக்கிய வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகியிருப்பது விடுதலை படம். இளையராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

ஜெயமோகனின் சிறுகதை படமாகிறது
விடுதலை படம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கிறது. சூரி முதல்முறையாக ஹீரோவாக அறிமுகமாகிறார். அதிலும் வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாவது நல்ல விஷயம் என ரசிகர்களும், திரையுலகினரும் வாழ்த்து கூறிவருகின்றனர். இந்தப் படமானது இரண்டு பாகங்களாக உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலையில் கவனம் ஈர்த்த இளையராஜா
இளையராஜா இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளன. விடுதலை படத்தில் இடம்பெற்றிருக்கும், 'உன்னோடு நடந்தா', 'வழி நெடுக காட்டு மல்லி' பாடலும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. 1500 படங்களுக்கு மேல் இசையமைத்தாலும் இளையராஜா இப்போதும் தனது இசையால் வசீகரிக்கிறார் என ஏகத்துக்கும் ரசிகர்கள் புகழவும் செய்தனர்.

அட்டகாசப்படுத்திய விடுதலை ட்ரெய்லர்
விடுதலை படத்தின் ட்ரெய்லர் சில வாரங்களுக்கு முன் ரிலீஸானது. வெற்றிமாறனின் அசுரத்தனமான மேக்கிங்கும், இளையராஜாவின் அட்டகாசமான இசையும் விடுதலை ட்ரெய்லருக்கு வரவேற்பை பெற்றுக்கொடுத்தன. மேலும் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள், சூரியின் நடிப்பையும், ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கும் வசனமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே இருக்கிறது.

மார்ச் 31ஆம் தேதி ரிலீஸாகிறது விடுதலை
இந்நிலையில் விடுதலை படம் எப்போது ரிலீஸாகும் என்ற கேள்வி எழுந்திருந்தது. தற்போது அதுதொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விடுதலை படமானது மார்ச் 31ஆம் தேதி வெளியாகிறது. படத்தை ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் வெளியாகிறது. ரிலீஸ் தேதி அறிவிப்பு குறித்த போஸ்டரில் நடிகர் சூரி கையில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்திருக்கிறார். தற்போது அந்தப் போஸ்டரை ரசிகர்கள் ட்ரெண்டாக்கிவருகின்றனர்.

வெற்றிமாறன் முக்கியமான இயக்குநர்
இயக்குநர் வெற்றிமாறன் சிறுகதைகளை திரைப்படமாக்குவதில் அதிக ஆர்வம் காட்டிவருகிறார். அந்தவகையில் தற்போது ஜெயமோகனுடன் இணைந்திருக்கிறார். இதனால் வெற்றிமாறன் படத்தை எப்படி ஹேண்டில் செய்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் இருக்கிறது. அதேசமயம் ஜெயமோகனின் சிறுகதையை வெற்றிமாறன் அப்படியே படமாக்கவில்லை எனவும் கோலிவுட்டில் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.
முன்னதாக விடுதலை ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய இசையாமைப்பாளர் இளையராஜா, "1,500 படங்களுக்கு இசையமைத்தவன் என்கிற முறையில் சொல்கிறேன். இயக்குநர்களில் வெற்றிமாறன் முக்கியமானவர் என புகழந்திருந்தார். இளையராஜா எந்த இயக்குநரையும் அவ்வளவு எளிதாக புகழக்கூடியவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











