Schindler’s List மாதிரி இருக்கு.. அந்த ஒரு நிர்வாணக் காட்சி.. விடுதலை படத்துக்கு விருது உறுதி!
சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகி உள்ள விடுதலை படத்தின் தரமான ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தி உள்ளது.
பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் என ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய இயக்குநர் வெற்றிமாறன் தனது விடுதலை முதல் பாகம் மூலம் மேலும், ரசிகர்களை மெய் சிலிரிக்க காத்திருக்கிறார்.
விடுதலை படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில், அதில் இடம்பெற்றுள்ள அந்த ஒரு நிர்வாணக் காட்சி அப்படியே உலகளவில் பிரபலமான ஹாலிவுட் படமான ஸ்கிண்ட்லர்ஸ் லிஸ்ட் படம் உருவாக்கிய தாக்கத்தை கொடுத்துள்ளதாக பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

ஆண்ட்ரியாவின் அரைநிர்வாணக் காட்சி
போல்டான காட்சிகளை படம் ஆக்குவதில் இயக்குநர் வெற்றிமாறன் தனக்கென தனி பாணியை தொடர்ந்து கையாண்டு வருகிறார். வடசென்னை படத்தில் அமீர் மற்றும் ஆண்ட்ரியாவின் முதல் இரவு பாடல் காட்சியில் ஆண்ட்ரியாவை அரை நிர்வாணமாகவே காட்டியிருப்பார். ஆனால், அந்த காட்சிக்கு எதிர்ப்பு வந்த நிலையில், பின்னர் படத்தில் இருந்து அதனை நீக்கினார்.

ஜெய்பீம் படத்தில் பாவாடை அவிழ்க்கும் காட்சி
இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் நடிகை சுபத்ராவை காவல் நிலையத்தில் வைத்து பாவாடையை கழட்டி மானபங்கம் பண்ணும் காட்சி படத்தை பார்த்த பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கும். போலீஸார் இப்படியும் பெண்களை நடத்துவார்களா? என பலரும் கோபமடைந்தனர். ஆஸ்கர் வரை அந்த படம் போட்டிக்கு சென்ற நிலையில், அதை விட உணர்ச்சி பிளம்பான ஒரு காட்சி தற்போது வெளியாகி உள்ள விடுதலை படத்தில் இடம்பெற்றுள்ளது.

பெண்களை நிர்வாணப்படுத்தி
கோஸ்ட் ஹன்ட் எனும் ஆப்பரேஷனை நடத்தி பெருமாள் வாத்தியாரை பிடிக்க போலீஸார் அங்கே உள்ள பெண்களை எல்லாம் அடித்து துன்புற்த்துவதோடு அவர்களின் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தும் அந்த ஒரு காட்சி விடுதலை ட்ரெய்லரை சாதாரணமாக பார்த்துக் கொண்டிருந்தவர்களை ஒரு செகண்ட் ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

தாலி அகற்றம்
தமிழ்நாட்டு பெண்களின் உணர்வுகளை டச் செய்யும் விதமாக ஆடைகளை களைவது மட்டுமின்றி பெண்கள் அணிந்திருக்கும் தாலிகளையும் காவல் துறையினர் கழட்டும் காட்சிகள் பார்க்கும் போதே ஒரு வித அச்சத்தையும் படம் பேசப் போகும் ஆழத்தையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.

ஸ்கிண்ட்லர்ஸ் லிஸ்ட் காட்சி
1993ம் ஆண்டு ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளியான Schindler's List திரைப்படம் பார்ப்பவர்களை பதை பதைக்க வைத்து விடும். ஒரு ரயில் முழுக்க ஆட்களை ஏற்றிக் கொண்டு நாஜி படைகளிடம் இருந்து காப்பாற்றும் ஆஸ்கர் ஸ்கிண்ட்லரின் வாழ்க்கை வரலாறு படமாக அந்த படம் உருவாகி இருக்கும். அதில், பெண்கள் செல்லும் ஒரு ரயில் பெட்டி வேறு ஒரு இடத்துக்கு இடம் மாறி செல்வதும், அங்கே பெண்களின் ஆடைகளை களைந்து அவர்களின் தலைமுடிகளை வெட்டும் கொடூரமான காட்சிகள் ரசிகர்களின் கண்களில் ரத்தத்தையே வரவழைத்திருக்கும்.

விருது உறுதி
அப்படியொரு காட்சியாக விடுதலை படத்தில் வெற்றிமாறன் வைத்திருப்பதை பார்க்கும் போதே இந்த படத்துக்கு தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் உறுதி என்றே ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். விரைவில் வெளியாக உள்ள விடுதலை படத்தின் முதல் பாகத்தை பார்க்க ரசிகர்கள் இப்போதே ரெடியாகி விட்டனர்.


Click it and Unblock the Notifications











