8 கோடி ரூபாயில் விடுதலை 2 படத்தின் க்ளைமாக்ஸ்.. பிரம்மாண்டமாக திட்டமிடப்படும் காட்சிகள்!
சென்னை : நடிகர் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் விடுதலை. வெற்றிமாறன் இயக்கத்தில் இந்தப் படம் சிறப்பாக உருவாகியுள்ளது.
எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக கொண்டு விடுதலை படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.
சத்தியமங்கலம் உள்ளிட்ட காட்டுப் பகுதிகளில் விடுதலை படத்தின் சூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

விடுதலை படம்
நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் விடுதலை. இந்தப் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இந்தப் படம் பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. சத்தியமங்கலம் உள்ளிட்ட காட்டுப் பகுதிகளில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது.

ரசிகர்களை கவர்ந்த போஸ்டர்கள்
தொடர்ந்து படத்தின் போஸ்டர்கள் பல கட்டங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. முன்னதாக விஜய் சேதுபதி இந்தப் படத்தில் கேமியோ ரோலில் மட்டுமே நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்தக் கேரக்டரின் சிறப்பை கருத்தில் கொண்டு இந்தக் கேரக்டர் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. படத்தில் விஜய் சேதுபதி, சூரி இவர்களுடன் கௌதம் மேனன், ராஜிவ் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

தமிழக உரிமையை கைப்பற்றிய உதயநிதி
விடுதலை படத்தின் தமிழக திரையரங்க உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகமும் சிறப்பாக உருவாகி வருகிறது. தற்போது இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக வருவதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் க்ளைமாக்சில் ட்ரெயின் பாம் பிளாஸ்ட் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட க்ளைமாக்ஸ் செட்
இதற்காக மிகவும் பிரம்மாணடமான வகையில் 8 கோடி ரூபாயில் செட் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான ரிகர்சல்கள் வண்டலூரில் நடைபெற்று வருகின்றன. இந்தக் காட்சியை ஒரே டேக்கில் எடுத்து முடிக்க இயக்குர் வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார். வரும் ஜனவரியில் விடுதலை பார்ட் ஒன் திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில், முன்னதாக படத்தின் ட்ரெயிலர் மற்றும் இசை வெளியீடு நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இளையராஜா இசை
படத்தில் இளையராஜாவுடன் முதல் முறையாக வெற்றிமாறன் கூட்டணி அமைத்துள்ளார். இதனிடையே, படத்தின் இசை வெளியீட்டில் இளையராஜா இசைக் கச்சேரி நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ் ஜனவரியில் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது பாகம் குறித்த அறிவிப்பும் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











