Vetri Maran: உதவி இயக்குநர்களுக்கு வெற்றி மாறன் செய்த உதவிகள்.. இவரைப் போய் தப்பா பேசீட்டீங்களே!
சென்னை: தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவர், தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருமுகம், இயக்குநர்களுக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள வெகு சில இயக்குநர்களில் முக்கியமானவர் என பல அடையாளங்களுக்குச் சொந்தக்காரர் இயக்குநர் வெற்றி மாறன். பாலுமகேந்திரா பட்டறையில் பட்டைதீட்டப்பட்ட சினிமா கூர்வாள்களில் ஒருவர் இயக்குநர் வெற்றி மாறன். தனது முதல் படத்தில் இருந்து வரும் 20ஆம் தேதி வெளியாகவுள்ள விடுதலை 2 படத்தின் ட்ரைலர் வரை இவர் ஏற்படுத்தியுள்ள தாக்கம்தான், திரையில் இவரது பெயர் வரும்போது எழும் கைத்தட்டல்களுக்கும் விசில்களுக்கும் காரணம்.
படங்கள் மட்டும் இல்லாமல், தான் கொடுக்கும் பேட்டிகளில் பேசும்போது சினிமா குறித்தும், ரசிகர்கள் குறித்துமான அவரது பார்வை தொடர்பாக அவர் பேசுவதும், தமிழ்நாடு அரசியல் சூழல் குறித்து பேசுவதையும் பார்த்த ரசிகர்களுக்கு இவரை இயக்குநராக மட்டும் அங்கீகரிக்கவில்லை. அதற்கும் மேல் அவருக்கு ஒரு இடம் கொடுத்து வைத்துள்ளார்கள். அதேபோல் திரையுலகில் மிகவும் பாராட்டப்படும் இயக்குநர்களில் ஒருவரான பா. ரஞ்சித் குறித்து, தமிழ் சினிமாவை, பா. ரஞ்சித்துக்கு முன் மற்றும் பா. ரஞ்சித்துக்குப் பின் என பிரித்துப் பார்க்கவேண்டும் எனக் கூறி, ரஞ்சித்தின் சினிமாவைக் கொண்டாடியவர்.

இவரது இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள படம் விடுதலை 2. இந்தப் படம் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான விடுதலை படத்தின் முதல் பாகத்தின் நீட்சி. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது, உதவி இயக்குநர் ஒருவரின் பெயரை ஒரு உதவி இயக்குநர் நினைவு படுத்த, பேசிக்கொண்டு இருந்த வெற்றிமாறன் இதனால் கோபம் அடைந்தார். மேலும், " டீம்னா எல்லாருமே தான்டா..' எனக் கூறிவிட்டு, மைக்கை மேடையில் வீசிவிட்டுச் சென்றுவிட்டார்.
விமர்சனம்: வெற்றி மாறனின் இந்த செயல் குறித்து பலரும் விமர்சித்தனர், குறிப்பாக, வெற்றிமாறன் தனது குடும்பத்தினரின் பெயரைக் குறிப்பிட நேரம் உள்ளது, மறந்துபோன மஞ்சுவாரியரின் பெயரை மற்றொருவர் நினைவு படுத்தும்போது, உடனே கேட்டுக் கொண்டு மஞ்சுவாரியரின் பெயரைச் சொல்கின்றார். ஆனால் உடன் பணியாற்றிய உதவி இயக்குநரின் பெயரைச் சொல்லாமல் கோபப்படுகின்றார் என விமர்சித்தனர். மேலும் மேடையிலேயே வெற்றி மாறன் தனது உதவி இயக்குநர்களை இந்த அளவுக்கு மோசமாக நடத்துகின்றார் என்றால், தனது அலுவலகத்தில் எந்த அளவுக்கு மோசமாக நடத்துவார் என்றெல்லாம் கேள்விகளை முன் வைத்தனர்.

வெற்றி மாறன்: இப்படியான நிலையில் மற்றொரு தகவல் இணையத்தில் உலா வருகின்றது. அதாவது வெற்றிமாறன் அன்றைக்கு தனது உதவி இயக்குநர்களின் பெயரைச் சொல்லக்கூடாது என்பதற்காக அப்படி நடந்து கொள்ளவில்லை எனவும், அனைவரது பெயரையும் குறிப்பிட்டால், நேரம் போதாது என்பதால்தான் தவிர்த்தார் எனவும், மஞ்சு வாரியர் ஏற்கனவே வெற்றி மாறனின் உதவியாளருக்கு தனிப்பட்ட முறையில் மெசேஜ் செய்தாராம். அதில், வெற்றி மாறன் என்னை மறந்துவிட்டால் நினைவுபடுத்தச் சொல்லிக் கூறியுள்ளார்.
உதவிகள்: மேலும், வெற்றி மாறன் தனது உதவியாளர்கள், உதவி இயக்குநர்கள் மற்றும் உடன் இருப்பவர்கள் என மொத்தம் 25 பேருக்கு செங்கல்பட்டு பகுதியை அடுத்துள்ள, உத்திரமேரூர் பகுதியில் வீடு கட்ட, ஒவ்வொருவருக்கும் தலா ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கிக் கொடுத்துள்ளார். இதுமட்டும் இல்லாமல், தனது கஷ்டகாலங்களில் அவர்களுக்கு பல உதவிகளைச் செய்துள்ளார். இதுமட்டும் இல்லாமல், அவரது பிறந்தநாளிலும் பலருக்கும் உதவி வருகின்றார் என்ற தகவல் இணையத்தில் உலா வருகின்றது. இந்தத் தகவலை வெற்றி மாறனின் ரசிகர் மன்றத்தினர் பகிர்ந்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











