Vijay Sethupathi: K.S.ரவிக்குமாரைவிட பெரிய ரவுடியா நீ?.. விஜய் சேதுபதி பகிர்ந்த சுவாரஸ்யமான விஷயம்!
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிப்பில் வரும் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம் விடுதலை2. இந்தப் படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணிகளில் வெற்றிமாறனும் அவரது குழுவினரும் வேகமாக ஈடுபட்டுக் கொண்டிருக்க, மறுபக்கம், விஜய்சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட நடிகர்ககள் படத்தின் ப்ரோமோசன் வேலைகளில் மிகவும் பிசியாக உள்ளனர். இப்படியான நிலையில் விடுதலை படத்தின் படக்குழுவினரை இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பேட்டி எடுத்தார். அதில் விஜய் சேதுபதி கே. எஸ் ரவிக்குமார் குறித்து பேசியது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
ஏற்கனவே கூறியதைப்போல், இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள படம் விடுதலை பாகம் 2. இந்தப் படத்திற்கான போஸ்ட் புரடக்ஷன் பணிகளில் வெற்றி மாறனும் அவரது குழுவினரும், ராப்பகலாக வேலைபார்த்து வருகின்றனர். படம் வெளியாக இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், படத்தின் ப்ரோமோசன் வேலைகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. படத்தின் பாடல்களை ஏற்கவே இசைஞானி இளையராஜா இசை அமைத்துக் கொடுத்து, அது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

படத்தின் பின்னணி இசை அமைக்கும் பணிகளிலும் இளையராஜா தீவிரமாக செயல்பட்டு வருகின்றார். இப்படியான நிலையில், படத்தின் ப்ரோமோசனுக்காக படக்குழுவினர், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் நடத்தும் நிகழ்ச்சிக்கு சென்றனர். அங்கு பேசுகையில் கே.எஸ். ரவிக்குமார் குறித்து விஜய்சேதுபதி கூறியது பலரது கவனத்தினை ஈர்த்தது. அதாவது அந்த நிகழ்ச்சியில் பேசும்போது, விஜய் சேதுபதி நான் படித்த கல்லூரியில்தான் படித்தார். அது எனக்கு விஜய் சேதுபதி கூறிய பின்னர்தான் தெரியும் என கே.எஸ். ரவிக்குமார் கூறினார்.
ரவுடி: உடனே விஜய் சேதுபதி, ஆமாம் சார், கல்லூரியில் சொன்னார்கள், ' கே.எஸ். ரவிக்குமாரை விட பெரிய ரவுடியா நீ' கூறினார். இதற்கு கே.எஸ். ரவிக்குமார் சிரித்துக் கொண்டே, முகத்தை மூடிக்கொண்டார், மேலும் இதனை கட் செய்துவிடுங்கள் எனவும் கூறினார். உடனே நடிகர் சூரி, கே.எஸ். ரவிக்குமாரைப் பார்த்து, " பாட்ஷா படத்திற்கு, சுரேஷ் கிருஷ்ணா உங்களிடம் கதை வாங்கினாரா? என நக்கலாக கேள்வி கேட்டார்.

பாட்ஷா பாய்: சூரியின் கேள்வி கே.எஸ். ரவிக்குமாருக்கு முதலில் புரியவில்லை. அதன் பின்னர், விஜய் சேதுபதி விளக்கிக் கூறினார். அதாவது உங்களது (கே.எஸ். ரவிக்குமார்) சொந்த வாழ்க்கையில் இருந்து பாட்ஷா படத்தின் கதை உருவானதா? என சூரி கேட்கின்றார் எனக் கூறினார். இதைக் கேட்டபின்னரும் கே.எஸ். ரவிக்குமார் சிரித்துவிட்டு, நான் இது கூட புரிந்து கொள்ள முடியாத, டியூப் லைட் எனக் கூறினார். தொடர்ந்து விஜய் சேதுபதி பேசுகையில், நாங்கள் படித்த கல்லூரியில் தீனதயாளன் என்ற ஆசிரியர் ஒருவர் இருக்கின்றார்.

ரியாக்ஷன்: அவர் ஒருமுறை, குறும்பு செய்த மாணவர் ஒருவரை கண்டிக்கும்போது, நீ என்ன கே.எஸ். ரவிக்குமாரைவிட பெரிய ரவுடியா? எனக் கேட்டார். அப்படியென்றால் பார்த்துக் கொள் கே.எஸ் ரவிக்குமார் சார் எந்த அளவுக்கு பெரிய ரவுடியாக இருந்திருப்பார் எனக் கூறினார். இதைக் கேட்ட கே.எஸ். ரவிக்குமார், நான் படப்பிடிப்புத் தளத்தில் வேலை நடக்கவில்லை என்றால், கத்துவேன். அதற்காக என்னை ரவுடி, பொறுக்கி என்று கூறுவது எந்த வகையில் நியாயம்? எனக் கேட்க, உடனே விஜய் சேதுபதி, " நான் எங்க சார் சொன்னேன், உங்க வாத்தியார்தான் சொன்னாரு, அவரைப் போய் கேளுங்க எனக் கூறினார். தீனதயாளன் சாருக்கு என்மீது வயிற்றெரிச்சல் அதான் அப்படிக் கூறியுள்ளார் என கே.எஸ். ரவிக்குமார் கூறினார்.



Click it and Unblock the Notifications