Viduthalai, Pathu Thala Box Office - விடுதலை, பத்து தல.. பாக்ஸ் ஆபிஸ் ரேஸில் முந்திய படம் எது தெரியுமா?
சென்னை: Viduthalai, Pathu Thala Box Office (விடுதலை, பத்து தல பாக்ஸ் ஆபிஸ்) விடுதலை, பத்து தல ஆகிய படங்களின் கலெக்ஷன்ஸ் குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்த பத்து தல படமும்வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்த விடுதலை படமும் கடந்த மாதம் 30,31ஆம் தேதிகளில் வெளியாகின.

கிருஷ்ணா இயக்கிய பத்து தல
சில்லுனு ஒரு காதல் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்திருந்த படம் பத்து தல. கன்னடத்தில் வெளியாகி மெகா ஹிட்டான மஃப்டி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவான இப்படம் கடந்த மாதம் 30ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் ஹிட்டானதால் இந்தப் படமும் ஹிட்டாகி சிம்பு ஹாட்ரிக் வெற்றியை ருசிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

கலவையான விமர்சனத்தை பெற்ற பத்து தல
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான பத்து தல படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. மஃப்டி படத்திற்கும் இந்தப் படத்திற்கும் சம்பந்தமே இல்லாத பல காட்சிகள் புகுத்தப்பட்டிருக்கின்றன எனவும்; சிம்பு ஓரளவு நடித்திருந்தாலும் தங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய படம் தவறிவிட்டதாகவும் ரசிகர்கள் ஓபனாகவே சமூக வலைதளங்களில் கூறினர்.

வெற்றிமாறனின் விடுதலை
அசுரன் படத்துக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கிய படம் விடுதலை. சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் கடந்த மாதம் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இளையராஜா இசையமைத்திருந்தார். காவல் துறையின் கோர முகத்தை இன்னொரு முறை வெற்றிமாறன் தோலுரித்துக்காட்டியிருப்பதாகவும், படத்தின் பல காட்சிகள் பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்தது எனவும் ரசிகர்கள் கூறினர்.

விடுதலைக்கு கிடைத்த பெரும் வரவேற்பு
விடுதலை படத்துக்கு ரசிகர்கள் தங்களது ஏகோபித்த ஆதரவை அளித்தனர். காமெடி நடிகர் சூரியை கதையின் நாயகனாக வைத்துக்கொண்டு திரையில் வெற்றிமாறனும், அவரது குழுவினரும் மிகப்பெரிய மாயாஜாலம் நிகழ்த்திவிட்டதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். அதேசமயம் படம் சுமார்தான் என்றாலும் வெற்றிமாறனின் இந்த முயற்சியை பாராட்ட வேண்டும். இரண்டாம் பாகம் வந்தால்தான் படம் முழுமை அடையும் எனவும் படம் பார்த்தவர்கள் கூறினர்.

விடுதலை, பத்து தல பாக்ஸ் ஆபிஸ்
பத்து தல திரைப்படம் வெளியாகி ஐந்து நாள்கள் முடிவடைந்திருக்கின்றன. விடுதலை வெளியாகி நான்கு நாள்கள் முடிவடைந்திருக்கின்றன. தற்போது இரண்டு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி ஐந்து நாள்கள் முடிவில் பத்து தல படம், நேற்றைய நிலவரப்படி 48 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது என்றும், விடுதலை படம் நேற்றைய நிலவரப்படி 28 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது. சிம்பு என்ற பெரிய ஹீரோவுக்கு 5 நாள்களில் 48 கோடி வசூல் என்பது குறைவே என்றும்; சூரிக்கு 4 நாள்களில் 28 கோடி வசூல் என்பது பெரிய விஷயமே எனவும் சமூக வலைதளங்களில் பேச்சு எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











