twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சாதிக்கு எதிராக இப்படி ஒரு படம் வந்தது இல்லை.. அசுரனை புகழும் விடுதலை சிறுத்தைகள் கட்சி!

    அசுரன் படம் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்து மிக தீவிரமாக பேசியுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி பாராட்டி இருக்கிறது.

    |

    Recommended Video

    ASURAN FDFS PUBLIC REVIEW | DHANUSH | VETRIMARAN | FILMIBEAT TAMIL

    சென்னை: அசுரன் படம் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்து மிக தீவிரமாக பேசியுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி பாராட்டி இருக்கிறது.

    இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அசுரன் படம் வெளியாகி உள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இந்த படம் வெளியாகி உள்ளது.

    இந்த படம் பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்ட படம் ஆகும். இந்த படம் குறித்த நேர்மறையான விமர்சனங்கள் தற்போது வெளியாகி வருகிறது.

    பாக்ஸ் ஆபிஸில் நம்பர் ஒன்.. வசூலில் மாஸ் காட்டும் அசுரன்.. தனுஷ் - வெற்றி கூட்டணி மீண்டும் சாதனை!பாக்ஸ் ஆபிஸில் நம்பர் ஒன்.. வசூலில் மாஸ் காட்டும் அசுரன்.. தனுஷ் - வெற்றி கூட்டணி மீண்டும் சாதனை!

    எப்படி இருக்கிறது

    பூமணி எழுதிய இந்த வெக்கை நாவலில் சாதி ரீதியான ஒடுக்குமுறைகள் குறித்து பேசப்பட்டு இருக்கிறது. சாதிக்கு எதிராக கடுமையான வாதங்கள் அதிகமாக வைக்கப்பட்டு இருக்கும். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக கடுமையான குரல் இதில் எழுப்பப்பட்டு இருக்கும்.

    அசுரன் எப்படி

    அசுரன் எப்படி

    இந்த நிலையில் அசுரன் படத்திலும் அதேபோல் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. சாதிக்கு எதிராக கடுமையான வசனங்கள் வைக்கப்பட்டு இருக்கிறது. இது படம் பார்ப்பவர்களை பெரிய அளவில் ஈர்த்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    விடுதலை முக்கியம்

    விடுதலை முக்கியம்

    இந்த நிலையில் இந்த படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்னியரசு இயக்குநர் வெற்றிமாறனைச் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். அவருக்கு புத்தர் சிலையை பரிசாக அளித்தார்.

    வன்னி அரசு

    வன்னி அரசு

    இதையடுத்து வன்னி அரசு இதுகுறித்து செய்துள்ள பேஸ்புக் போஸ்டில் , சாதிய- வர்க்க அடக்குமுறைகளுக்கு
    எதிராக இவ்வளவு துணிச்சலாக இதுவரை தலித்துகளின் பக்கம் நின்று யாரும் படம் எடுக்கவில்லை. அப்படி எடுத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை அப்படியே காட்சிபடுத்தியிருக்கிறார் இயக்குனர்.

    பஞ்சமி நிலம்

    பஞ்சமி நிலம்

    பஞ்சமி நிலங்கள் குறித்து துணிச்சலாக பேசியிருக்கிறான் அசுரன் "திருப்பி அடிச்சா தான் நம்ம வலிமை அவனுகளுக்கு புரியும்" என்று ஆதிக்க சாதியினருக்கு எதிராக அசுரன் வேட்டையாடியிருக்கிறான், என்று இந்த படத்தை பாராட்டி இருக்கிறார்.

    English summary
    Viduthalai Siruththaikal Katchi gives thumps up for Asuran movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X