Viduthalai 1: சரக்கடிச்சாலும் வெற்றிமாறன் மீது மரியாதை வரும்... விஜய் சேதுபதியின் அடடே விளக்கம்!

சென்னை: வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த வாரம் வெளியானது.

விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, சேத்தன், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

இந்தப் படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், விடுதலை வெற்றி விழாவை படக்குழு கொண்டாடியது.

அப்போது பேசிய விஜய் சேதுபதி, வெற்றிமாறன் மீதான மரியதை குறித்து அடடே ரகத்துடன் விளக்கம் கொடுத்தது வைரலாகி வருகிறது.

விடுதலை சக்சஸ் மீட்
வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இதன் இரண்டாம் பாகம் மீதும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதனிடையே விடுதலை படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில், விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 Viduthalai Success Meet: Vijay Sethupathi explains that he has always had respect for Vetrimaaran

விடுதலை படத்தில் சூரி லீடிங் கேரக்டரிலும், விஜய் சேதுபதி வாத்தி என்ற செம்ம மாஸ்ஸான ரோலிலும் நடித்துள்ளனர். முதல் பாகத்தை விட இரண்டாவது பாகத்தில் விஜய் சேதுபதிக்கு காட்சிகள் அதிகம் இருக்கும் என சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி, சூரி இருவருக்குமே இந்தப் படம் மிக முக்கியமான மைல் ஸ்டோன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விடுதலை சக்சஸ் மீட்டில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, வெற்றிமாறன் குறித்து பேசியிருந்தார்.

அதில், விடுதலை படத்தில் எந்த ப்ரேமை பார்த்தாலும் அதில் வெற்றிமாறன் தான் பிரதானமாக தெரிகிறார். இப்போதுகூட தன்னால் அவரை பார்த்து பேச முடியவில்லை, கூச்சமாக உள்ளது. ஒருவேளை சரக்கு அடித்துவிட்டு போதையில் பேசினால் கூட, அவரிடம் மரியாதையாக தான் பேசுவேன். தனது சிந்தனை நிலை தடுமாறினாலும் அவரிடம் மரியாதை தவறியதில்லை. அவர் மீது ரொம்பவே மரியாதை உள்ளது என விஜய் சேதுபதி கூறினார்.

விஜய் சேதுபதியின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. எப்போதுமே மனதில் பட்டதை ஓபனாக பேசிவிடுபவர் விஜய் சேதுபதி. அதேபோல், வெற்றிமாறன் முன் சரகட்டித்துவிட்டு பேசுவேன் என விஜய் சேதுபதி கூறியுள்ளது, உண்மையாக நடந்த ஒரு சம்பவத்தை அவர் வெளிப்படையாக சொன்னதாகவே தெரிகிறது. ஒருவேளை படப்பிடிப்பின் போது வெற்றிமாறனிடம் சரக்கடித்துவிட்டு விஜய் சேதுபதி பேசியிருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

விடுதலை படத்திற்காக மொத்தமே 4 நாட்கள் தான் ஷூட்டிங் எனக் கூறி விஜய் சேதுபதியை அழைத்துச் சென்றவர் வெற்றிமாறன். பின்னர் காட்சிகள் அதிகரிக்கவே விஜய் சேதுபதியின் கால்ஷீட்டும் அதிகமாக தேவைப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழ் சினிமாவின் முக்கியமான ஒரு படைப்பாக இருக்கும் என்பதை புரிந்துகொண்டு விஜய் சேதுபதியும் தனது கால்ஷீட்டை அதிகமாக கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

{image-vetrimaran-1680849084.jpg tamil.filmibeat.com

விஜய் சேதுபதியால் தான் விடுதலை படத்தின் ஷூட்டிங் தாமதமாகி வருவதாக முன்பு செய்திகள் வெளியாகின. அப்போது தான் இது தவறான தகவல் என இயக்குநர் வெற்றி மாறனே விளக்கம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. விடுதலை முதல் பாகத்தின் வெற்றிவிழாவை கொண்டாடி முடித்துவிட்ட வெற்றிமாறன், இரண்டாம் பாகத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷனில் கவனம் செலுத்த ரெடியாகிவிட்டாராம். அதனால் விரைவில் விடுதலை இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X