இங்கேயும் கணக்கா.. ‘சகுந்தலா தேவி’ ரிலீஸ் தேதி.. பஸில் மூலம் அறிவித்த வித்யா பாலன்!
சென்னை: விக்ரம் மல்கோத்ரா தயாரிப்பில் அனு மேனன் இயக்கத்தில் வித்யா பாலன் நடிப்பில் உருவாகி வரும் சகுந்தலா தேவி படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
ஹீயூமன் கம்ப்யூட்டர் என செல்லமாக அழைக்கப்பட்ட பெண் கணித மேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் உருவாகி வருகிறது.
அனு மேனன் இயக்கி வரும் இந்த படத்தில் சகுந்தலா தேவியாக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடித்து வருகிறார்.

வித்யா பாலன்
டர்ட்டி பிக்சர் அளவுக்கு இறங்கி நடிக்க வேண்டும் என்றாலும் சரி, மிஷன் மங்கள் அளவுக்கு உயர பறந்து நடிக்க வேண்டும் என்றாலும் சரி தனக்கு கிடைக்கும் கதாபாத்திரங்களை தூக்கி சாப்பிட்டு தூள் கிளப்புவார் வித்யா பாலன். தற்போது கணித மேதை சகுந்தலா தேவியாகவே மாறியுள்ளார் வித்யா பாலன்.

கின்னஸ் நாயகி
நவம்பர் மாதம் 4ம் தேதி 1923ம் ஆண்டு பிறந்த சகுந்தலா தேவி கணிதத்தில் சிறந்து விளங்கினார். 1982ம் ஆண்டு தனது கணித ஆற்றல் காரணமாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்தார். 2013ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.
எப்போ ரிலீஸ்
சகுந்தலா தேவி படம் இன்னும் 148 நாட்களில் வெளியாகிறது என்றும், ஒரு சின்ன எமோஜி பஸலையும் வெளியிட்டு, மே 8, 2020ல் படம் வெளியாகிறது என கணிதம் வழியாகவே படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது நடிகை வித்யா பாலன் அறிவித்துள்ளார்.
கணக்கில் தப்பு
கணக்கு புதிர் போடுகிறேன் என்ற பெயரில் வித்யா பாலன் வெளியிட்டுள்ள வீடியோவில், 8ம் தேதி படம் ரிலீசாகிறது. படத்தின் வெளியீட்டு மாதத்தையும் ஆண்டையும் கூட்டினால் அதே எட்டு வரும் புதிர் போட்டு, பின்னர் மே மாதம் 8ம் தேதி 2020ல் படம் ரிலீசாகிறது எனக் கூறியுள்ளார். ஆனால், மே மாதம் 5வது மாதம் என்றும் 2020 ஐ எண் படி கூட்டினால், 4 தானே வரும் அப்போது 8 எப்படி வரும் 5+4 = 9 தானே என நெட்டிசன்கள் கண்டுபிடித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











