எம்.எஸ்.சுப்புலட்சுமி வேடத்தில் 'டர்ட்டி' வித்யா!

By Sudha

சென்னை: புகழ் பெற்ற கர்நாடக இசைப் பாடகி, மறைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவுள்ளது. ராஜீவ் மேனன் இப்படத்தை இயக்கப் போகிறார். இவரது வேடத்தில் நடிக்க நடிகை வித்யா பாலனை அவர் தேர்வு செய்துள்ளார். இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

வித்யாபாலனை சுப்புலட்சுமி போன்ற மேதைகளின் கேரக்டரில் நடிக்க வைக்கக் கூடாது என்று எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இதுதொடர்பாக இந்து மக்கள் கட்சி ராஜீவ் மேனனுக்கு கடிதம் எழுதியுள்ளது. உடனடியாக வித்யாவை நடிக்க வைக்கும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று அது கோரிக்கை விடுத்துள்ளது.

குறை ஒன்றும் இல்லை...

குறை ஒன்றும் இல்லை...

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா.. இந்தப் பாடலை, அதுவும் எம்.எஸ்.ஸின் குரலில் கேட்கும் யாருமே கரைந்து போய் விடுவார்கள். மனசெல்லாம் லேசாகி, அப்படியே சொக்கிப் போய் நிற்பார்கள். அப்படிப்பட்ட தெய்வீக குரலுக்குரியவர்தான் எம்.எஸ்.என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட சுப்புலட்சுமி.

பாரதரத்னாவை நேரில் பெற்றவர்

பாரதரத்னாவை நேரில் பெற்றவர்

உயிருடன் இருந்தபோதே அவருக்கு பாரதரத்னா விருது கொடுத்து அவருக்குரிய கெளரவத்தை உரிய நேரத்திலும் கொடுத்து அழகு பார்த்தது பாரதம்.

திரைப்படமாகும் வாழ்க்கை வரலாறு

திரைப்படமாகும் வாழ்க்கை வரலாறு

தற்போது சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. அவருக்கும், திரைப்படத்திற்கும் நிறையவே தொடர்புகள் உண்டு. பல காலத்திற்கு முன்பு, அதாவது நாடு சுதந்திரமடைவதற்கு முன்பு சினிமாவில் நடித்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி.

ராஜீவ் மேனன் இயக்குகிறார்

ராஜீவ் மேனன் இயக்குகிறார்

எம்.எஸ்.ஸின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இயக்கப் போவது ராஜீவ் மேனன்.இவர் ஒரு ஒளிப்பதிவாளர். எம்.எஸ். வேடத்தில் நடிக்க இவர் தேர்வு செய்திருப்பது வித்யாபாலன்.

சில்க் வேடத்தில் நடித்தவர் எம்.எஸ்.ஸ்ஸா...

சில்க் வேடத்தில் நடித்தவர் எம்.எஸ்.ஸ்ஸா...

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் சில்க் வேடத்தில் படு கவர்ச்சிகரமாக நடித்தவர்தான் வித்யா. இந்த நிலையில் அவரைப் போய் எம்.எஸ். வேடத்தில் நடிக்க ராஜீவ் மேனன் தேர்வு செய்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு

இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு

இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலாளர் குமார் என்பவர் கூறுகையில், எம்.எஸ்.சுப்புலட்சுமி கர்நாடக இசை உலகில் புகழ்பெற்ற மாமேதை. அவர் வாழ்க்கையை ராஜீவ்மேனன் படமாக எடுப்பதை வரவேற்கிறோம். ஆனால் எம்.எஸ்.சுப்புலட்சுமி வேடத்தில் வித்யாபாலன் நடிப்பதை எதிர்க்கிறோம்.

ஆபாசத்தை அள்ளித் தெளித்தவர் வித்யா பாலன்

ஆபாசத்தை அள்ளித் தெளித்தவர் வித்யா பாலன்

வித்யாபாலன் கவர்ச்சி நடிகை. டர்டி பிக்சர்ஸ் படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்து ஆபாசத்தை அள்ளி தெளித்துள்ளார். எம்.எஸ்.சுப்புலட்சுமி கேரக்டரில் வைத்து வித்யாபாலனை பார்க்க முடியாது. ஆபாச நடிகையாகவே தெரிவார். எனவே அவரை நடிக்க வைக்ககூடாது. வேறு நடிகையை ராஜீவ்மேனன் தேர்வு செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

மேனன் என்ன செய்யப் போகிறாரோ...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X