வித்யாபாலனின் ஷெரினி… புலியின் கர்ஜனையுடன் புடவையில் கம்பீரமான போஸ் !
மும்பை: பாலிவுட் நடிகை வித்யா பாலன், அமித் மசுர்கார் இயக்கத்தில் ஷெர்னி என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் விளம்பரத்திற்காக புலி கர்ஜனையுடன் அழகாக அச்சிடப்பட்ட சேலையில் விதவிதமான போஸ் கொடுத்துள்ளார்.
இந்த திரைப்படம் அமேசான் பிரைமில் ஜூன் 18ந் தேதி வெளியாக உள்ளது.

ஷெரினி
அமித் மசுர்கார் இயக்கத்தில் பாலிவுட் நடிகை வித்யாபாலன், ஷரத் சக்சேனா, முகுல் சக்தா மற்றும் விஜய் ராஸ் ஆகியோரின் நடிப்பில் ஷெர்னி படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் நேர்மையான வனத்துறை அதிகாரியாக வித்யாபாலன் நடித்துள்ளார்.

ஜூன் 18ந் தேதி
அமேசான் பிரைமில் இத்திரைப்படம் ஜூன் 18ந் தேதி வெளியாக உள்ளது இந்த திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. நேர்மையான வனத்துறையாக அதிகாரியாக இருக்கும் வித்யாபாலன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சொல்லும் திரைப்படமாக இப்படம் அமைந்துள்ளது.
Recommended Video

புலியின் கர்ஜனையுடன்
இதனிடையே ஷெரினி திரைப்படத்தின் விளம்பரத்திற்காக, படத்தின் மையக்கருவான புலியின் கர்ஜனையுடன் அச்சிடப்பட்ட புடவையில் கம்பீரத்துடன் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். அவாஸ் டெடோ என்ற சேலை வடிவமைப்பாளர், சேலையில் புலி கோடுகள், தாமரைகளை அழகாக வடிவமைத்துள்ளார். சேலையின் விளிம்புகள் கூட கையால் கட்டப்பட்டுள்ளன.

ரசிகர்கள் கவலை
இதற்குமுன்பு வித்யாபாலன் நடித்த சகுந்தலா தேவி திரைப்படமும் அமேசான் பிரைம் ஒடிடியில் தான் வெளியானது. இந்த நிலையில் ஷெரினி திரைப்படமும் ஒடிடியில் வெளியாவது வித்யாபாலன் ரசிகர்கள் சற்று கவலை கொள்ள செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











