பணத்திற்காக அரசியல் கட்சிக்கு விளம்பரம் செய்ய மறுத்த அந்த 4 பிரபலங்கள் யார்?
மும்பை: பணம் கொடுத்தாலும் அரசியல் கட்சிகளுக்கு சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்ய மாட்டோம் என்று தெரிவித்த 4 பாலிவுட் பிரபலங்களை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.
கோப்ராபோஸ்ட் ஆன்லைன் செய்தி நிறுவனம் பணத்திற்காக அரசியல் கட்சிகளுக்கு சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்ய ஒப்புக் கொண்ட 36 பாலிவுட் பிரபலங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
பணம் கொடுத்தாலும் விளம்பரம் செய்ய முடியாது என்று 4 பேர் மட்டும் தெரிவித்துள்ளனர்.

வித்யா பாலன்
பாலிவுட் நடிகை வித்யா பாலன், நடிகர்கள் அர்ஷத் வர்சி, ராசா முராத் மற்றும் தொலைக்காட்சி சீரியல் நடிகை சவுமியா டான்டன் ஆகியோர் மட்டும் பணம் கொடுத்தாலும் எந்த கட்சிக்கும் விளம்பரம் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
நெட்டிசன்கள்
பணத்திற்காக அரசியல் கட்சிகளுக்கு விளம்பரம் செய்ய மறுத்த வித்யா பாலன் உள்ளிட்ட நான்கு பேரை நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர். உங்களை போன்ற ஆட்கள் தான் இந்த நாட்டிற்கு தேவை என்கிறார்கள்.
பெருமை
பணம் தான் முக்கியம் என்று எதையும் செய்ய தயாராக உள்ள ஆட்களுக்கு மத்தியில் வித்யா பாலன் செய்த காரியம் அவரின் ரசிகர்களை பெருமை அடைய வைத்துள்ளது.
விளம்பரம்
எனக்கு பிடித்த நடிகையான வித்யா பாலன் பணத்திற்காக அரசியல் கட்சிக்கு விளம்பரம் கொடுக்க மறுத்துள்ளார். அர்ஷத் வர்சி மற்றும் ராசா முராத் சாபும் கூட. குடோஸ் என்று அபிசார் சர்மா ட்வீட்டயுள்ளார்.


Click it and Unblock the Notifications











