வித்யா பாலன் நடிப்பில் உருவாகியுள்ள ஷெர்னி படம்... ரிலீசானது ட்ரெயிலர்

மும்பை : அமித் மசுர்கார் இயக்கத்தில் வித்யாபாலன் நடித்துள்ள படம் ஷெர்னி.

நேர்மையான வனத்துறை அதிகாரியாக வித்யாபாலன் இந்த படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் தற்போது படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.

வித்யா பாலன் நடிப்பு

வித்யா பாலன் நடிப்பு

அமித் மசுர்கார் இயக்கத்தில் பாலிவுட்டில் வித்யாபாலன், ஷரத் சக்சேனா, முகுல் சத்தா மற்றும் விஜய் ராஸ் அகியோரின் நடிப்பில் ஷெர்னி படம் உருவாகியுள்ளது. நேர்மையான வனத்துறை அதிகாரியாக இந்த படத்தில் வித்யா பாலன் நடித்துள்ளார். இந்த படம் ஓடிடியில் நேரடியாக வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ரிலீஸ் குறித்து வித்யா பாலன்

ரிலீஸ் குறித்து வித்யா பாலன்

கொரோனா தாக்கத்தையடுத்து வித்யா பாலன் இதற்கு முன்பு நடித்திருந்த சகுந்தலா தேவி படமும் அமேசான் பிரைம் ஓடிடியில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த படமும் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது. இதை கடந்த சில தினங்களுக்கு முன்பு வித்யா பாலன் ட்விட்டரில் அறிவித்திருந்தார்.

Recommended Video

CHUBBY யாதான் சாதிச்சோம் | REWIND RAJA EP-03 | FILMIBEAT TAMIL
ட்ரெயிலர் வெளியீடு

ட்ரெயிலர் வெளியீடு

இந்நிலையில் வரும் 18ம் தேதி இந்த படம் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் புதிய ட்ரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது. டீ சீரிஸ் தயாரிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு அமேசான் பிரைம் வீடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் இவள் தனது தடத்தை பதிக்க தயாராக இருக்கிறாள் என்று கூறியிருந்தது.

சிறப்பான வரவேற்பு

சிறப்பான வரவேற்பு

இந்த படத்தின் போஸ்டரும் சிறப்பான வரவேற்பை பெற்றது. இதனிடையே இன்று வெளியிடப்பட்டுள்ள ட்ரெயிலரும் சிறப்பாக உள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. நேர்மையான வனத்துறை அதிகாரி எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சொல்லும் படமாக இது அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X