மனித கம்ப்யூட்டராக வித்யா பாலன் நடித்துள்ள பயோபிக் பட ரிலீஸ் தேதி.. வெளியிட்டது அமேசான் பிரைம்!
மும்பை: வித்யாபாலன் நடித்துள்ள அந்த பயோபிக் படத்தில் ரிலீஸ் தேதியை அமேசான் பிரைம் வெளியிட்டுள்ளது.
Recommended Video
பெங்களூரைச் சேர்ந்தவர், சகுந்தலா தேவி. முறையான கல்வி பெறாமல், தானாகக் கணக்குகளைத் தீர்க்கப் பழகியவர்.
கஷ்டமான கணக்குகளுக்கு கூட சில நொடிகளில், மனக்கணக்கில் தீர்வுகாண்பதில் வல்லவர்.

நடிகை வித்யா பாலன்
இதற்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்த இவர், 2013 ஆண்டு தனது 83 வயதில் மரணமடைந்தார். உலகின் வேகமான மனிதக் கணினி என்று அழைக்கப்படும் இவரது கதை சினிமாவாகி இருக்கிறது. சகுந்தலா தேவியாக, நடிகை வித்யா பாலன் நடித்துள்ளார். அனுமேனன் படத்தை இயக்கியுள்ளார். சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் விக்ரம் மல்ஹோத்ரா தயாரித்துள்ளனர்.

பர்ஸ்ட் லுக்
இந்தப் படத்தில் வித்யா பாலனின் பர்ஸ்ட் லுக் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. சகுந்தலா தேவியை போல முடியை, குட்டையாக வெட்டி அவர் போலவே தோன்றி இருந்தார். இந்த லுக் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்தப் படம் எப்போது வெளியாகும் என்று லாக்டவுனுக்கு முன் வீடியோ ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார் வித்யாபாலன்.

கணக்கு போட்டு
அதில் அஞ்சையும் மூனையும் கூட்டினால் எட்டு.. பிறகு.. என ஆரம்பித்து கணக்கு போட்டிருந்தார் வித்யா. பிறகு ஐந்து விரல்கள் மற்றும் மூன்று விரல்களையும் காட்டி, மே என்பதற்காக ஆடு ஒன்றையும் ஸ்பீக்கர் ஒன்றையும் இணைத்துக் காட்டி இருந்தார்.
சகுந்தலா தேவி, கணக்கில் வல்லவர் என்பதால் இப்படி கணக்கு போட்டு ரிலீஸ் தேதியை வீடியோவாக வெளியிட்டிருந்தனர்.

ரிலீஸ் தேதி
ஆனால் லாக்டவுன் மொத்தமாக மாற்றிவிட்டது. இதன் காரணமாக தியேட்டர்கள் திறப்பதற்கு காலதாமதமாகும் என்பதால், தயாரிப்பாளர்கள் ஒடிடி-யில் படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் சகுந்தலாதேவி படமும் ஒடிடியில் வெளியாகிறது. இதை அமேசான் பிரைம் வரும் 31 ஆம் தேதி வெளியிடுகிறது. படத்தில் சன்யா மல்ஹோத்ரா, ஜுஸு சென்குப்தா, அமித் சாத் உட்பட பலர் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











