“பிரபல தமிழ் தயாரிப்பாளர் என்னை ரூமுக்கு அழைத்தார்.. ” ஷாக் தரும் நேர்கொண்ட பார்வை நாயகி வித்யாபாலன்

பிரபல தயாரிப்பாளர் தன்னை ரூமுக்கு அழைத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகை வித்யாபாலன்.

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை வித்யா பாலன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

பாலிவுட்டில் பிஸியாக நடித்து வருபவர் நடிகை வித்யா பாலன். நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான 'தி டெர்டி பிக்சரில்' நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

சமீபத்தில் அவர் அஜித்துக்கு ஜோடியாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். மேலும், அவரது இந்தி படமான மிஷன் மங்களும் கடந்த 15ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஒரு பேட்டியில், தன்னை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் படுக்கைக்கு அழைத்ததாகக் கூறி பரபரப்பை கிளப்பி இருக்கிறார் வித்யா பாலன். இதுகுறித்து அவர் கூறியாதாவது,

முதல் தமிழ்ப்படம்

முதல் தமிழ்ப்படம்

"ஆரம்பத்தில் நான் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தேன். சில நாட்கள் அந்த படத்தில் நடிக்கவும் செய்தேன். திடீரென ஒரு நாள் அந்த படத்தில் இருந்து என்னை தூக்கிவிட்டனர். இதனால் நானும் எனது பெற்றோரும் கவலை அடைந்தோம்.

அதிரடி நீக்கம்

அதிரடி நீக்கம்

தயாரிப்பாளரிடம் சென்று என்னை நீக்கியதற்கான காரணத்தை கேட்டோம். படத்தில் நான் நடித்த சில காட்சிகளை எனது பெற்றோரிடம் காண்பித்து 'உங்கள் மகள் ஹீரோயின் மாதிரியா இருக்கிறாள்' என கேட்டார் அவர். மேலும் என்னை ஹீரோயினாக போடுவதில் தனக்கு விருப்பம் இல்லை என்றும், இயக்குனரின் கட்டாயத்தால் தான் என்னை ஹீரோயினான ஒப்பந்தம் செய்ததாகவும் அவர் கூறினார்.

அசிங்கமானவள்

அசிங்கமானவள்

இதை கேட்டதும் என்னை மிக அசிங்கமானவளாக நான் உணர்ந்தேன். பல மாதங்கள் கண்ணாடி பார்க்காமல் இருந்தேன். ஏனெனில் என்னை நானே அசிங்கமாக கருதினேன். அந்த தயாரிப்பாளரை நான் எனது வாழ்நாளில் மன்னிக்கவே மாட்டேன். இன்று நான் எப்படி இருக்கிறேனோ, அதை நேசிக்கிறேன்.

சென்னையில் படப்பிடிப்பு

சென்னையில் படப்பிடிப்பு

இதேபோல் மற்றொரு தமிழ் படத்தில் நடித்த அனுபவமும் உண்டு. இப்போது இருப்பது போல் எல்லாம் அப்போது வசதிகள் கிடையாது. ஒருவர் போன் மூலம் என்னை தன்னுடைய படத்திற்கு ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தார். ஒரு நாள் தான் சென்னையில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டேன்.

தவறான நடவடிக்கை

தவறான நடவடிக்கை

அவர் என்னிடம் நடந்துகொண்டவிதம் எனக்கு பிடிக்கவில்லை. ஒரு நாள் அப்பட தயாரிப்பாளர் என்னைச் சந்திக்க வந்தார். காபி ஷாப்பில் அமர்ந்து பேசலாம் என கூறினேன். ஆனால் அவர் 'நிறைய பேசணும்.. ரூமுக்கு போவோம்' என ரூமுக்கு செல்வதிலேயே குறியாக இருந்தார்.

வக்கீல் நோட்டீஸ்

வக்கீல் நோட்டீஸ்

ரூமுக்கு சென்று கதவை திறந்தே வைத்தேன், வெறும் ஐந்து நிமிடத்தில் கிளம்பி சென்றுவிட்டார். அவரது நடவடிக்கைகள் பிடிக்காததால், அந்த படத்தில் இருந்து விலகிவிட்டேன். அதற்காக அவர்கள் எனக்கு வக்கீல் நோட்டீஸ் கூட அனுப்பினார்கள்" என வித்யா பாலன் கூறியுள்ளார்.

நேர்கொண்ட பார்வை

நேர்கொண்ட பார்வை

முன்னதாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்க ஒப்பந்தமான போதே, போனி கபூர் விரும்பிக் கேட்டுக் கொண்டதால் தான் அப்படத்தில் நடிக்க சம்மதித்தேன் என வித்யாபாலன் கூறியிருந்தது நினைவுகூரத் தக்கது. பாலிவுட்டில் திறமையான நடிகை எனப் பேர் வாங்கிய வித்யாபாலனுக்கு தமிழ் சினிமாவில் நடந்த இந்த கசப்பான சம்பவங்கள் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X