வித்யாவுக்கு மும்பையில் கல்யாணம், சென்னையில் வரவேற்பு... வேலையெல்லாம் 'தீயா' நடக்குது!

By Sudha

மும்பை: நடிகை வித்யா பாலனுக்கும், சித்தார்த் ராய் கபூருக்கும் இடையிலான கல்யாண வேலைகள் படு ஜரூராக நடந்து வருகிறதாம். கல்யாணத்தை பஞ்சாபி மற்றும் தமிழ் ஸ்டைலில் நடத்தவுள்ளனராம். கல்யாணத்தை முடித்த கையோடு சென்னைக்கு வரும் வித்யாபாலன், அங்கு வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாராம்.

யூடிவியின் சித்தார்த்தும், 'டர்ட்டி' வித்யாவும்!

யூடிவியின் சித்தார்த்தும், 'டர்ட்டி' வித்யாவும்!

டர்ட்டி பிக்சர்ஸ் மூலம் இந்தியாவின் அத்தனை பகுதியிலும் பரபரப்பாக பேசப்பட்டவர் வித்யா பாலன். இவர் நீண்ட காலமாக காதலித்து வந்தவர்தான் இந்த சித்தார்த். இவர் யூடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைவராவார்.

ரகசியம்.. படு ரகசியம்

ரகசியம்.. படு ரகசியம்

இவர்கள் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்தாலும் அதுகுறித்த தகவல் எதுவும் வெளியாகி விடாமல் படு கமுக்கமாக இருந்து வந்தனர். படு ரகசியமான இந்தக் காதல் விவகாரம் சில மாதங்களுக்கு முன்புதான் லேசாக கசியத் தொடங்கியது. இப்போது கல்யாணத்தில் முடியவுள்ளது.

டிசம்பர் 14ம் தேதி கல்யாணம்

டிசம்பர் 14ம் தேதி கல்யாணம்

டிசம்பர்14ம் தேதி சித்தார்த், வித்யா கல்யாணம் மும்பையில் நடைபெறவுள்ளது. தமிழ் பாணியில் திருமணம் நடைபெறவுள்ளதாம். 11ம் தேதி பஞ்சாபி பாணியில் சங்கீத் நிகழ்ச்சிக்கு திட்டமிட்டுள்ளனராம்.

சென்னையில் வரவேற்பு

சென்னையில் வரவேற்பு

மும்பையில் கல்யாணத்தை முடித்த கையோடு கணவருடன் சென்னைக்குக் கிளம்பி வருகிறார் வித்யா பாலன். இங்கு வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தவுள்ளனராம். வித்யா பாலன் சென்னையைச் சேர்ந்தவர் என்பதால் சென்னையில் வரவேற்பை வைக்க விரும்புகிறார். அதனால்தான் அனைவரும் சென்னைக்கு வருகிறார்கள் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

வேலையெல்லாம் தீயா நடக்குது நல்லதம்பி...!

வேலையெல்லாம் தீயா நடக்குது நல்லதம்பி...!

தற்போது திருமண வேலைகள் படு ஜரூராக நடந்து வருகிறதாம். உடைகள் வாங்குவது, சேலைகள் வாங்குவது, மாப்பிள்ளைக்கு டிரஸ் எடுப்பது, நகை நட்டுக்களை வாங்குவது என அத்தனை பேரும் செம பிஸியாக ஓடிக் கொண்டுள்ளனராம்.

ரொம்ப கூட்டமெல்லாம் இருக்காதாம்

ரொம்ப கூட்டமெல்லாம் இருக்காதாம்

திருமணத்தையும், வரவேற்பையும் மிகவும் சிம்பிளாக நடத்த விரும்புகிறாராம் வித்யா பாலன். இதனால் கெஸ்ட் லிஸ்ட்டைக் கூட அவர் பார்த்து பார்த்து இறுதி செய்து வருகிறாராம். குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் போதுமே என்று கூறி வருகிறாராம் வித்யா.

ஜூஹு பக்கம் ரூ. 14 கோடிக்கு வீடு

ஜூஹு பக்கம் ரூ. 14 கோடிக்கு வீடு

திருமணத்தை முடித்துக் கொண்ட பின்னர் மும்பை, ஜூஹுவில் கடற்கரையை நோக்கியவாறு உள்ள ஒரு பிரமாண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டை வாங்கி போட்டுள்ளாராம் சித்தார்த். திருமணத்திற்குப் பின்னர் இந்த வீட்டில்தான் குடியேறப் போகிறார்களாம் சித்தார்த்தும், வித்யா பாலனும். ஆனால் ஏற்கனவே அங்கு பால் காய்ச்சி குடியேறி விட்டதாக ஒரு கிசுகிசு உள்ளது.

தித்திப்பு... திகட்டாத இனிப்பு எங்களது உறவு...!

தித்திப்பு... திகட்டாத இனிப்பு எங்களது உறவு...!

தனக்கும் சித்தார்த்துக்கும் இடையிலான உறவு குறித்து வித்யா கூறுகையில், எங்களது உறவை ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் உந்தியு என்று சொல்லலாம். அப்படி என்றால், சுவையானது, இனிப்பானது, நறுமணமானது, தித்திப்பானது, உப்பும் நிறைந்தது என்று அர்த்தம். அதாவது எங்களது உறவில் எல்லாமே உண்டு என்று கூறுகிறார்.

18 நிறத்தில் பட்டுச் சேலைகள்

18 நிறத்தில் பட்டுச் சேலைகள்

வித்யா பாலன் தமிழகத்து பாரம்பரியப்படி பட்டுச் சேலை அணிந்துதான் கழுத்தில் தாலியை வாங்கிக் கொள்ளப் போகிறார். இதற்காக அவர் 18 பட்டுச் சேலைகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளாராம். சபயசாச்சி முகர்ஜிதான் இந்த சேலையை வடிவமைக்கிறாராம்.

கரீபியத் தீவுகளில் ஹனிமூன்

கரீபியத் தீவுகளில் ஹனிமூன்

திருமணத்திற்குப் பின்னர் கரீபியத் தீவுகளில் தேனிலவுக்காக செல்லப் போகிறார்களாம் வித்யாவும், சித்தார்த்தும்.

அவருக்கு 34... இவருக்கு 38

அவருக்கு 34... இவருக்கு 38

மணப் பெண் வித்யா பாலனுக்கு 34 வயதாகிறது. சித்தார்த்துக்கு 38 வயதாகிறது. இருவரும் தங்களது இருமணம் இணையும் நாளை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X