»   »  நடிகையை சப்புன்னு அறைஞ்சுட்டு முத்தம் கொடுத்து சமாதானம் செய்த...

நடிகையை சப்புன்னு அறைஞ்சுட்டு முத்தம் கொடுத்து சமாதானம் செய்த...

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பேகம் ஜான் படப்பிடிப்பின்போது வித்யா பாலன் சக நடிகையான ஷப்னமின் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டு அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து சமாதானம் செய்துள்ளார்.

ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கத்தில் வித்யா பாலன் விபச்சார விடுதி நடத்தும் பெண்ணாக நடித்துள்ள படம் பேகம் ஜான். படம் நாளை ரிலீஸாகிறது. கதை வித்யா பாலனை சுற்றியே இருக்கும்.

பெங்காளி படமான ராஜ்கஹானியின் இந்தி ரீமேக் தான் இந்த பேகம் ஜான்.

வித்யா

வித்யா

காட்சிப்படி வித்யா தனது சக நடிகையான ஷப்னமை கன்னத்தில் அறைய வேண்டும். ஒரு முறை அல்ல பல முறை. இதை கேட்ட வித்யா பாலனுக்கு சங்கடமாகப் போய்விட்டதாம்.

எப்படி?

எப்படி?

தங்கச்சி போன்று இருக்கும் ஷப்னமை எப்படி அறைவது என்று கவலைப்பட்டுள்ளார் வித்யா பாலன். பின்னர் வேறு வழியில்லாலமல் ஷப்னமை ஓங்கி அறைந்துள்ளார்.

சமாதானம்

சமாதானம்

ஷப்னமை அறைந்த பிறகு வித்யா பாலனுக்கு வருத்தமாகிவிட்டது. இதையடுத்து அவர் ஷப்னமை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து சமாதானம் செய்துள்ளார்.

இயக்குனர்

இயக்குனர்

ஒவ்வொரு முறை அறைந்த பிறகும் வித்யா ஷப்னமை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். வித்யா கதாபாத்திரமாகவே மாறியுள்ளதாகவும் படம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

English summary
Bollywood actress Vidya Balan has hugged and kissed her co-star Shabnam after slapping her for the upcoming movie Begum Jaan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil