தகிட தகிட தகிட.. டி. ராஜேந்தர் டான்ஸ் போட்ட ‘டர்ட்டி பிக்சர்’ நடிகை.. வேறலெவலில் ஆடும் வித்யா பாலன்!

சென்னை: பிரபல பாலிவுட் நடிகையான வித்யா பாலன் தமிழில் குரு, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். டர்ட்டி பிக்சர் படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்து தேசிய விருது வென்ற வித்யா பாலன் தற்போது டி. ராஜேந்தர் வாயாலே மியூசிக் போட்டு பாடிய பாடலுக்கு சூப்பரா டான்ஸ் போட்டுள்ள வீடியோவை வெளியிட்டு ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறார்.

2003-ஆம் ஆண்டு வங்காள மொழியில் வெளியான பலோ தேக்கோ படத்தின் மூலம் அறிமுகமானவர் வித்யாபாலன். அதன் பின்னர் 2005 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான பரிணீத்தா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆனார்.

Vidya Balan T Rajendar dance goes trending in twitter in national level

மணிரத்னம் இயக்கத்தில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மாதவன் நடிப்பில் வெளியான குரு படத்தில் நடித்து பிரபலமானார்.

சில்க் ஸ்மிதா பயோபிக்: வங்காளம், இந்தி, மலையாளத்தில் உருமி உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த வித்யா பாலன் பாலிவுட்டில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான தி டர்ட்டி பிக்சர் படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்து ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தார். அந்தளவுக்கு கவர்ச்சி காட்டி வித்யா பாலன் எப்படி நடித்தார் என பலரும் ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், அவரது அட்டகாசமான நடிப்புக்காக தேசிய விருதையும் வென்று மாஸ் காட்டினார்.

அஜித் ஹீரோயின்: குரு படத்தில் முக்கிய ரோலில் வித்யா பாலன் நடித்திருந்தாலும் அந்த படம் இந்தி படமாகவே பார்க்கப்படுகிறது. மணிரத்னம் இந்தியில் இயக்கி தமிழில் டப் செய்யப்பட்ட படமாகவே குரு வெளியானது. வித்யா பாலனின் நேரடி தமிழ் படமாக எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த நேர்கொண்ட பார்வை படம் தான் உள்ளது. அந்த படமும் பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்த பிங்க் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

டி. ராஜேந்தர் டான்ஸ்: தகிட தகிட தகிட.. தடக்கு தடக்கு தடக்கு என ஃபேன் சுத்துவதை வைத்தே தாளத்தை உருவாக்கி பாட்டு பாடினேன் என டி. ராஜேந்தர் வாயாலே மியூசிக் போடும் வீடியோவை பேக் கிரவுண்டில் ஓடவிட்டு அதற்கு வித்யா பாலன் கொடுத்துள்ள அசத்தல் பர்ஃபார்மன்ஸ் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது மட்டுமின்றி இந்தியளவில் அந்த வீடியோ டிரெண்டாகி விட்டது. 45 வயதில் இப்படியொரு வீடியோவை வித்யா பாலன் வெளியிட்டுள்ளார். அடுத்து அவர் நடிப்பில் டு அவுர் டு பியார் படம் வெளியாகிறது. அந்த படத்திற்கான புரமோஷன் யுக்தியாக இந்த வீடியோ அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X