பாவம், அஜித் ஹீரோயினுக்கு இப்படி ஒரு வினோத பிரச்சனையா?
Recommended Video

மும்பை: நடிகை வித்யா பாலன் தனக்கு உள்ள வினோத பிரச்சனை குறித்து தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் நடிகைகள் குச்சி, குச்சியாக இருக்கும்போது வித்யா பாலன் மட்டும் பூசினாற் போன்று உள்ளார். பூசினாற் போன்று இருந்தாலும் மார்க்கெட் பாதிக்காது என்று அவர் நிரூபித்துள்ளார்.
தல 59 மூலம் கோலிவுட் வரும் வித்யா பாலன் தனது உடல் எடை பிரச்சனை குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

டீனேஜ்
சிறு வயதில் இருந்தே எனக்கு ஹார்மோன் பிரச்சனை உள்ளது. நான் டீனேஜில் இருந்தபோது என்னை பார்ப்பவர்கள் எவ்வளவு அழகான முகம், உடம்பை குறைத்தால் நன்றாக இருக்குமே என்பார்கள். பெரியவர்களோ, சிறியவர்களோ யாராக இருந்தாலும் அவர்களை பார்த்து இப்படி சொல்வது சரி அல்ல. நான் பல நாட்கள் பட்டினி எல்லாம் கிடந்திருக்கிறேன்.

ஒர்க்அவுட்
கடுமையாக ஒர்க்அவுட் செய்து உடல் எடையை குறைப்பேன். ஹார்மோன் பிரச்சனை கட்டுக்குள் வரும். ஆனால் பிறகு மீண்டும் அதே பிரச்சனை ஏற்படும். உடல் எடை ஏறுவதும், நான் குறைப்பதுமாகத் தான் என் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.

கோபம்
படப்பிடிப்பு தளத்தில் மானிடரை பார்ப்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டேன். மானிடரை பார்த்து குண்டாகிவிட்டோமோ என்று நினைக்க விரும்பவில்லை. நீங்கள் ஏன் ஒர்க்அவுட் செய்யக் கூடாது என்று கூறுபவர்களிடம் f**k you என்று சொல்லத் தோன்றும். நான் ஒர்க் அவுட் செய்யவில்லை என்று உங்களுக்கு தெரியுமா?

வித்யா பாலன்
நான் எவ்வளவு கடினமாக ஒர்க்அவுட் செய்கிறேன் தெரியுமா?. எனக்கு என்ன பிரச்சனை உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா? ஹார்மோன் பிரச்சனையால் என் எடை குறையாமல் போய்விட்டது என்று உங்களுக்கு தெரியுமா? அது மட்டும் இல்லை ஒரு சமயத்தில் நான் எந்த அளவுக்கு ஒர்க்அவுட் செய்கிறேனோ, அந்த அளவுக்கு வெயிட் போட்டது உங்களுக்கு தெரியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார் வித்யா பாலன்.


Click it and Unblock the Notifications











