Kamal Haasan 234 - த்ரிஷாவும் இல்லை நயன்தாராவும் இல்லை.. கமல் ஹீரோயினாக ரேஸில் முந்திய பாலிவுட் நடிகை?
சென்னை: Kamal Haasan 234 (கமல் ஹாசன் 234) கமல் ஹாசனும், மணிரத்னமும் இணையும் படத்தின் ஹீரோயின் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்திய சினிமாவில் நடிப்பின் உச்சம் என புகழப்படுபவர் சிவாஜி கணேசன். அவருக்கு அடுத்ததாக அந்த இடத்தை நெருங்கியவர் கமல் ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தவர் இதுவரை 233 படங்களில் நடித்திருக்கிறார். சாமானியர்கள் முதல் செலிபிரிட்டிகள்வரை அவர் மீது மிகுந்த மரியாதையை வைத்து அவரது நடிப்புக்கு தீவிர ரசிகர்களாக இருக்கின்றனர்.

புதுமை கமல் ஹாசன்: கமல் ஹாசன் என்றாலே உழைப்பு, வித்தியாசம், புதுமை என்று பெயர் எடுத்தவர். அவரது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு புதுமையையோ, வித்தியாசத்தையோ இடம்பெற செய்துவிடுவார். அதனால்தான் எத்தனை இயக்குநர்கள் வந்தாலும் நாங்கள் இப்போது செய்வதை கமல் சார் அப்போதே செய்துவிட்டார் என்று ஏகத்துக்கும் புகழ்வார்கள்.
இயக்கத்திலும் புதுமை: நடிப்பு மட்டுமின்றி அவர் இயக்கிய விருமாண்டி, ஹேராம் ஆகிய படங்களும் இன்றுவரை தமிழ் சினிமாவின் பெஞ்ச் மார்க்காக இருக்கின்றன. குறிப்பாக விருமாண்டி படத்தின் திரைக்கதை புதுமையிலும் புதுமையாக இருந்தது. ஒரே கதையை இரண்டு பேர் தங்களது பார்வையில் விவரிக்கும் மாயாஜாலத்தை முதல்முதலில் திரையில் நிகழ்த்திக்காட்டியவர் கமல் ஹாசன். அதேபோல் அவர் கதை எழுதிய அன்பே சிவம் படம் வெளியானபோது கொண்டாடப்படாமல் இப்போது கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது.

கமலின் கம்பேக்: நடிப்பிலிருந்து ஒதுங்கி அரசியலில் கவனம் செலுத்திய கமல் ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. படத்தில் கமலின் நடிப்பை பார்த்த ரசிகர்கள் உலக நாயகனின் நடிப்பு இன்னமும் அப்படியேத்தான் இருக்கிறது. அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
க்ளாசிக் கூட்டணி: விக்ரம் கொடுத்த வெற்றியின் உற்சாகத்தை அடுத்து சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் கமல்.அந்தவகையில் படங்களை தயாரிக்கவும் செய்யும் அவர் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்திலும், ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார். ஏற்கனவே கமல் ஹாசன் - மணிரத்னம் இணைந்த நாயகன் திரைப்படம் இந்தியா சினிமாக்களில் அழிக்க முடியாத க்ளாசிக் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் ஹீரோயின்: ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் அந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விரைவில் ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது. அதேசமயம் படத்தின் ஹீரோயின் யார் என்ற கேள்வி பட அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரசிகர்களை துரத்திக்கொண்டிருந்தது. இந்தச் சூழலில் த்ரிஷாவும், நயன் தாராவும் ஹீரோயினாக நடிப்பார்கள் என தகவல்கள் வெளியாகின.

யாரும் இல்லை அவர்தான்: இந்நிலையில் இந்தப் படத்தின் ஹீரோயின் தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, த்ரிஷா, நயன் தாரா இந்தப் படத்தில் நடிப்பதைவிட பாலிவுட் நடிகை வித்யாபாலன் நடிக்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், அவருடன் பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஏற்கனவே அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











