அந்த காரணங்களால்.. ஒப்பந்தமான 6 படங்களில் இருந்து திடீரென நீக்கினார்கள்.. பிரபல நடிகை வருத்தம்!

By

சென்னை: ஒப்பந்தமான 6 படங்களில் இருந்து என்னைத் திடீரென நீக்கினார்கள் என்று பிரபல நடிகை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

கோமாளி படத்தில் நடித்த பட்ஜி போடும் Aunty யார்? |Comali Movie

தமிழில் மீரா கதிரவன் இயக்கிய அவள் பெயர் தமிழரசி படத்தில் தியானா என்ற படம் மூலம் நடிகையானவர் வித்யா.

தியானா என்ற பெயரில் அடுத்து சில படங்களில் நடித்த அவர், பிறகு தன் பெயரை வித்யா பிரதீப் என்று மாற்றினார்.

ஒத்தைக்கு ஒத்த

ஒத்தைக்கு ஒத்த

விஜய் இயக்கிய சைவம், பாண்டிராஜின் பசங்க 2, அச்சமின்றி, இரவுக்கு ஆயிரம் கண்கள், மாரி 2, தடம் உட்பட சில படங்களில் நடித்துள்ள இவர், இப்போது ஒத்தைக்கு ஒத்த, அசுரகுலம், தலைவி ஆகிய படங்களில் நடித்துள்ளார். டிவி.சீரியல்களிலும் நடித்து வருகிறார். சன் டிவியில் வந்த நாயகி தொடரில் நடித்துள்ளார்.

நடிகை வித்யா பிரதீப்

நடிகை வித்யா பிரதீப்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்குப் பிறகு நடிகர், நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த மன அழுத்தம் பற்றி வெளிப்படையாக பேசத் தொடங்கி இருக்கிறார்கள். சில நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த மன அழுத்தம் பற்றி கூறியிருந்தனர். இந்நிலையில் வித்யா பிரதீப்பும் தமிழ் சினிமாவில் தனக்கு நேர்ந்த அதிர்ச்சி அனுபவம் பற்றி சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

என்னை நீக்கிவிட்டார்கள்

என்னை நீக்கிவிட்டார்கள்

அவர் அதில் கூறியிருப்பதாவது: 'தடம்' படத்தில் நடிப்பதற்கு முன் 6 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தேன். இதனால் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால், திடீரென அந்த படங்களில் இருந்து என்னை நீக்கிவிட்டார்கள். தொழிலுக்கு சம்பந்தமில்லாத காரணங்களுக்காக நான் நீக்கப்பட்டேன். இதனால் நான் படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.

இயக்குனர் மகிழ்திருமேனி

இயக்குனர் மகிழ்திருமேனி

அப்போதுதான் காஸ்டிங் டைரக்டர் ஸ்ருதி, 'தடம்' படத்துக்காக இயக்குனர் மகிழ் திருமேனியை சந்திக்க முடியுமா? என்று கேட்டார். அவர் சொன்னபடி ஆடிஷனுக்கு சென்றேன். தேர்வானேன். போலீஸ் கேரக்டரில் என்னால் சிறப்பாக நடிக்க முடியுமா என்று தயங்கினேன். ஆனால் இயக்குனர் மகிழ்திருமேனி ஊக்கப்படுத்தினார். எங்களை கவுரவமாக நடத்தினார். அவருடன் பணிபுரிந்தது எனக்கு கிடைத்த சிறந்த அனுபவம். இவ்வாறு கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X