’பவுடர்’ பேய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.. ஹீரோயின் யார் தெரியுமா?
சென்னை: 'பவுடர்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள பேய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.
நாயகி சீரியல், அருண் விஜய்யின் தடம் படத்தில் நடித்த வித்யா பிரதீப் இந்த படத்தில் லீடு ரோலில் நடித்துள்ளார்.

கையில் வாளுடன்
சன் டிவியில் ஒளிபரப்பான 'நாயகி' சீரியலில் லீடு ரோலில் நடித்து வந்த நடிகை வித்யா பிரதீப் லீடு ரோலில் நடிக்கும் பேய் படத்திற்கு Take Diversion Powder என தலைப்பு வைத்துள்ளனர். தமிழில் வெறும் பவுடர் என்றே அழைக்கின்றனர். கையில் வாளுடன் மகாராணி லுக்கில் ஒருபுறமும் கண்ணாடியில் பேயாக இன்னொரு புறமும் ஃபர்ஸ்ட் லுக்கில் மிரட்டுகிறார் வித்யா.

போலீஸ் வேடத்தில்
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து அசத்திய தடம் படம் 2019ல் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அந்த படத்தில் எந்த அருண் விஜய் கொலைகாரன் என்பதை கண்டுபிடிக்கும் சீரியஸ் போலீஸ் அதிகாரியாக வித்யா பிரதீப் நடித்து இருப்பார்.

ஏகப்பட்ட படங்கள்
2010ம் ஆண்டு வெளியான நடிகர் ஜெய்யின் அவள் பெயர் தமிழரசி படத்தின் மூலம் அறிமுகமானார் வித்யா பிரதீப். ஆனால், அந்த படத்தின் போது அவரது பெயர் தியானா என குறிப்பிடப்பட்டு இருக்கும். தொடர்ந்து விருந்தாளி, சைவம், பசங்க 2, அச்சமின்றி, மாரி 2, பொன்மகள் வந்தாள் என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் ரிலீஸ்
இயக்குநர் விஜய் ஸ்ரீயின் மேக்கப்பாக உருவாக உள்ள இந்த பவுடர் பேய் படத்தில் நடிகர்கள் மனோபாலா, வையாபுரி, ஆதவன், ஷாலு ஷம்மு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் ஒவ்வொரு நடிகர்களுக்கும் தனித் தனி போஸ்டர்கள் வெளியான நிலையில், வித்யா பிரதீப்பை லீடாக்கி டைட்டில் உடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.
Recommended Video

ஷாலு ஷம்மு
காமெடி நடிகை ஷாலு ஷம்மு பிக் பாஸ் 4ல் கலந்து கொள்ளப் போவதாக ரூமர்கள் வெளியாகின. ஆனால், அவரோ அடுத்தடுத்து படங்களில் கமீட் ஆகி பிசியாகி உள்ளார். இருட்டு அறையில் முரட்டுக் குத்து 2ம் பாகம் மற்றும் பவுடர் உள்ளிட்ட 2 படங்களிலும் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











