சென்னை என்ஜினியரை மணந்த தங்கச்சி நடிகை
கொச்சி:
நடிகை திவ்யா உன்னியின் தங்கை நடிகை வித்யா உன்னிக்கும் சென்னையை சேர்ந்த சஞ்சய்க்கும் திருமணம் நடைபெற்றது.
சபாஷ், பாளையத்து அம்மன், கண்ணன் வருவான், வேதம், ஆண்டான் அடிமை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் திவ்யா உன்னி. கேரளாவை சேர்ந்த அவரின் தங்கை வித்யா உன்னி மலையாள படங்களில் நடித்துள்ளார்.
அக்காவை போன்றே வித்யா உன்னியும் சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.
வித்யா
வித்யா கொல்லத்தில் உள்ள அம்ரிதா ஸ்கூல் ஆஃப் என்ஜினியரிங்கில் படித்தவர். அவர் தற்போது ஹாங்காங்கில் உள்ள காக்னிசன்ட் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை செய்கிறார். இந்நிலையில் வித்யா உன்னிக்கும், சென்னையை சேர்ந்த சஞ்சய் வெங்கடேஸ்வரனுக்கும் கொச்சியில் திருமணம் நடைபெற்றது.

திவ்யா
வித்யா, சஞ்சய் திருமண நிகழ்ச்சியில் திவ்யா உன்னி மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு முன்பு வித்யா உன்னியும், சஞ்சயும் கலந்து கொண்ட போட்டோஷூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

நடனம்
சஞ்சய் சிங்கப்பூரில் உள்ள டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக உள்ளார். அக்கா திவ்யாவை போன்றே வித்யா உன்னியும் ஒரு நாட்டிய கலைஞர் ஆவார். வித்யா டாக்டர் லவ், 3ஜி தர்ட் ஜெனரேஷன் ஆகிய மலையாள படங்களில் நடித்துள்ளார்.

டான்ஸ் கிளாஸ்
அமெரிக்காவில் வசித்து வரும் திவ்யா உன்னி அங்கு டான்ஸ் ஸ்கூல் வைத்து நடத்தி வருகிறார். வித்யாவுக்கு திருமணம் நடப்பதே திவ்யா சமூக வலைதளத்தில் சூசகமாக தெரிவித்ததன் மூலம் தான் பலருக்கும் தெரிய வந்தது.


Click it and Unblock the Notifications











