புதிய சாதனை படைத்த கில்லி ரீ ரிலீஸ்.. தியேட்டரில் 'வைப்' செய்த லெஜெண்டுகள்!

சென்னை: விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் 2004-ம் ஆண்டு வெளிவந்த படம் கில்லி. 20 வருடத்திற்கு பிறகு கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகி உள்ள போதும், இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு இருக்கும் ஈர்ப்பு சற்றும் குறையாததால், படத்தை தியேட்டரில் ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். இப்படம் ரீ ரிலீஸ் ஆன அனைத்து தியேட்டரிலும் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன் தியேட்டரில் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து திரையில் சக்கை போடு போட்ட திரைப்படங்களை மீண்டும் கையில் எடுத்து ரீ ரிலிஸ் செய்ய தொடங்கியுள்ளது தமிழ் சினிமா. இதற்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருப்பதால் தொடர்ச்சியாக பழைய படங்கள் ரீ ரிலிஸ் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆளவந்தான், முத்து, வாரணம் ஆயிரம், 3, மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்கள் வெளியானது. இந்த படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது விஜய், த்ரிஷா கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகி உள்ளது.

Vidyasagar and Dharani watched ghilli re release in theatre

கில்லி ரீ ரிலீஸ்: தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த ஒக்கடு திரைப்படத்தின் ரீ ரிலீஸ் தான் கில்லி. தரணி இயக்கி இருந்த இந்தப் படத்துக்கு வித்யாசாகர் இசை அமைத்திருந்தார். 2004ம் ஆண்டு வெளியான இப்படம் அக்காலகட்டத்தில் சூப்பர் ஹிட்டானது. அப்படத்தில் விஜய்க்காக சில காட்சிகள் மாற்றப்பட்டன. குறிப்பாக ஒக்கடு படத்தில் மகேஷ் பாபுவிற்கு தம்பி இருந்த நிலையில், கில்லி படத்தில் விஜய்க்காக தங்கை கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. அதில் ஜெனிபர் விஜய்யின் தங்கையாக நடித்திருந்தார். அந்த படத்தில் அவர்களின் காம்பினேஷன் சிறப்பாக அமைந்து இருந்தது. கில்லி படத்தில் விஜய்யின் நடிப்பை பார்த்த மகேஷ் பாபு, அவரை வெகுவாக பாராட்டியதாகவும் அப்போது பேப்பரில் செய்திகள் வெளியானது.

புதிய சாதனை: 20 ஆண்டுகள் கழித்தும் இப்படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி மக்கள் பலரும் குடும்பமாக சென்று படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர். இப்படி இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்து வருவதால் வசூல் ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்து வருவதாக சொல்லப்படுகிறது. ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட முதல் நாளிலே 4 கோடிகளுக்கு மேல் உலகம் முழுவதும் வசூல் செய்து ரீ ரிலீஸ் செய்த படங்களில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்து இருக்கிறது கில்லி.

மகிழ்ந்த லெஜெண்ட்: இப்படம் உலகளவில் ரூ. 24 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்றும், படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும், இப்படத்தின் வசூல் குறையாததால், கில்லி திரைப்படம், 50 கோடி வரை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கில்லி திரைப்படத்தை இயக்கிய தரணி மற்றும் அப்படத்தின் இசையமைப்பாளரான வித்யாசாகர் கில்லி படம் ஓடும் திரையரங்கிற்கு சென்று படத்தை கண்டு மகிழ்ந்தனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X