இது லவ் மேரேஜ்தான், ஆனால் ரகசிய நிச்சயதார்த்தம் இல்லை.. சொல்கிறார் நடிகை வித்யுலேகா ராமன்!

By

சென்னை: தனது திருமணம் காதல் திருமணம் தான் என்றும் ஆனால், நிச்சயதார்த்தம் ரகசியமாக நடக்கவில்லை என்றும் நடிகை வித்யூலேகா ராமன் தெரிவித்துள்ளார்

பிரபல நடிகர் மோகன் ராமின் மகள் வித்யுலேகா ராமன். காமெடி நடிகை.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய, நீதானே என் பொன்வசந்தம் என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானார் வித்யுலேகா.

சமந்தாவின் தோழி

சமந்தாவின் தோழி

அதில் நடிகை சமந்தாவின் தோழியாக நடித்திருந்தார். தொடர்ந்து, தீயா வேலை செய்யணும் குமாரு, விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம், வேதாளம், தனுஷின் பவர் பாண்டி, பஞ்சுமிட்டாய் உள்பட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி ஹீரோ படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார்ர்.

சஞ்சய் வத்வானி

சஞ்சய் வத்வானி

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் வித்யுலேகாவுக்கு தொழிலதிபர் சஞ்சய் வத்வானியுடன் கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த விழாவில் இரண்டு குடும்பத்தினரின் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களை வித்யுலேகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

நெருங்கிய உறவினர்கள்

நெருங்கிய உறவினர்கள்

இதுபற்றி அவர், 'கடந்த மாதம் 26 ஆம் தேதி எங்கள் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். நாங்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து இந்த விழாவில் கலந்து கொண்டோம். உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி' என்று கூறி இருந்தார். அவருடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரலாயின.

காதல் திருமணம்தான்

காதல் திருமணம்தான்

இந்நிலையில் நான் செய்துகொள்ள இருப்பது காதல் திருமணம்தான் என்று கூறியுள்ளார் வித்யூலேகா. அவர் கூறும்போது, ' இது காதல் திருமணம்தான். நிச்சயதார்த்தத்தை ரகசியமாக நடத்தவில்லை. சூழல் சரியில்லை என்பதால் இப்போதைக்கு தெரியபடுத்த வேண்டாம் என்று நினைத்தோம். ரசிகர்களுக்கு இது ஆச்சரியமாக இருக்கட்டும் என்று அமைதியாக இருந்துவிட்டோம்.

Recommended Video

Dr.SethuRaman Memories | Sahana | Unmaiyal | KLTA
தவிர்த்து வருகிறேன்

தவிர்த்து வருகிறேன்

கொரோனா நிலைமை சீரான பிறகே எங்கள் திருமணம் நடக்கும். தமிழ் சினிமாவில் படங்களை தவிர்த்து வருகிறேன். சிறந்த, அழுத்தமான கேரக்டருக்காக காத்திருக்கிறேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், தெலுங்கை ஒப்பிடும்போது தமிழில் எனக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தெலுங்கில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X