பிரபல தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம்.. நடிகை வித்யுலேகா ராமன் திருமணம் எப்போது? குடும்பம் தகவல்!

By

சென்னை: பிரபல காமெடி நடிகை வித்யுலேகா ராமன் திருமண நிச்சயதார்த்தம் லாக்டவுனில் நடந்துள்ளது.

பிரபல காமெடி நடிகை வித்யுலேகா ராமன் திருமண நிச்சயதார்த்தம் கடந்த 26 ஆம் தேதி ரகசியமாக நடந்தது.

இவர், பிரபல நடிகர் மோகன் ராமின் மகள். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய, நீதானே என் பொன்வசந்தம் என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானார் வித்யுலேகா.

சமந்தாவின் தோழி

சமந்தாவின் தோழி

அதில் நடிகை சமந்தாவின் தோழியாக நடித்திருந்தார். தொடர்ந்து, தீயா வேலை செய்யணும் குமாரு, விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம், வேதாளம், தனுஷின் பவர் பாண்டி, பஞ்சுமிட்டாய் உள்பட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி ஹீரோ படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் இவர் நடித்துள்ளார்.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் வித்யுலேகா, தனக்கு காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக நேற்றிரவு தெரிவித்து இருந்தார். அவருக்கு தொழிலதிபர் சஞ்சய் வத்வாவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த விழாவில் இரண்டு குடும்பத்தினரின் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

நெருங்கிய உறவினர்கள்

நெருங்கிய உறவினர்கள்

இதுபற்றி அவர், 'கடந்த 26 ஆம் தேதி எங்கள் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். நாங்கள் அனைவரும் மாஸ்க் அணிந்தே இந்த விழாவில் கலந்து கொண்டோம். இப்போது போட்டோவுக்காக அதை நீக்கி இருக்கிறோம். உங்கள் அன்பும் வாழ்த்துக்களுக்கும் நன்றி' என்று கூறியுள்ளார்.

தொழிலதிபர்

தொழிலதிபர்

இதையடுத்து திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வித்யுலேகா திருமண நிச்சயதார்த்தம் பற்றி அவர் குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், வித்யூலேகா திருமணம் செய்துகொள்ள இருக்கும் சஞ்சய் வத்வானி, தொழிலதிபர் என்று கூறியுள்ளனர். Keto என்ற பெயரில் நிறுவனம் நடத்தும் அவர் சிந்தி குடும்பத்தை சேர்ந்தவர்.

Recommended Video

Watch Video : Comedy actress vidyulleka raman Workout
சுகர் ஃபிரி பொருட்கள்

சுகர் ஃபிரி பொருட்கள்

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்றும் அவர் குடும்பத்தினர் ஜவுளி தொழில் செய்து வருவதாகவும் கூறியுள்ளனர். அதோடு சஞ்சய், சுகர் இல்லாத ஐஸ்கிரீம் மற்றும் சுகர் ஃபிரி பொருட்களை பிசினஸ் செய்துவருவதாகவும் கூறியுள்ளனர். கொரோனா தொற்று முழுமையாக முடிந்த பிறகு திருமணத்தை நடத்திக் கொள்ள இரு குடும்பத்தினரும் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X