'நீங்க மரியாதை தரலைன்னா குறைஞ்சிட மாட்டோம்..' புறக்கணித்த ஓடிடி தளம்.. பிரபல நடிகர்கள் வருத்தம்!

By

மும்பை: பட வெளியீடு பற்றிய அறிவிப்புக்குத் தங்களை அழைக்காமல் புறக்கணித்ததை அடுத்து பிரபல நடிகர்கள் வருத்தத்துடன் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

பிரபல இந்தி நடிகர் வித்யூத் ஜம்வால். தமிழில், அஜித்தின் பில்லா 2, விஜய்யின் துப்பாக்கி படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்த அஞ்சான் படத்தில் அவர் நண்பராக நடித்திருக்கிறார்.

குடா ஹாபிஸ்

குடா ஹாபிஸ்

இந்தியில் புல்லட் ராஜா, கமாண்டோ, ஜங்கிளி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். டிவி சீரியல்களிலும் நடித்துள்ள இவர் ஆக்‌ஷனுக்காக புகழப்படுபவர். இவர் இப்போது பரூக் கபிர் இயக்கியுள்ள குடா ஹாபிஸ் (Khuda Haafiz) என்ற படத்தில் நடித்துள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதில், ஷிவலீகா ஓபராய், அன்னு கபூர், ஷிவ் பண்டிட், ஆஹனா குமாரா உட்பட பலர் நடித்துள்ளனர்.

டிஸ்னி ஹாட்ஸ்டார்

டிஸ்னி ஹாட்ஸ்டார்

இந்தப் படம் ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆகிறது. டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடுகிறது. கடந்த மூன்று மாதங்களாக கொரோனா லாக்டவுனால் தியேட்டர்கள் திறக்கப்படாததால், கோடிகளில் முதலீடு செய்துள்ள சினிமா தயாரிப்பாளர்கள் ஓடிடி தளங்களில் படங்களை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி வித்யூத் ஜாம்வாலின் குடா ஹாபிஸ் உட்பட 7 படங்களை டிஸ்னி ஹாட்ஸ்டார் வெளியிடுகிறது.

அஜய் தேவ்கனின் புஜ்

அஜய் தேவ்கனின் புஜ்

இதில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்‌ஷய்குமார் நடித்துள்ள லக்‌ஷ்மி பாம் (காஞ்சனா ரீமேக்), தற்கொலை செய்துகொண்ட சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தில் பெச்சாரே, அஜய்தேவ்கனின் புஜ், ஆலியா பட்டின் சடக் 2, அபிஷேக் பச்சனின் த பிக் புல், குணால் கேமுவின் லூட்கேஸ் ஆகிய படங்களை ரிலீஸ் செய்யும் ஹாட் ஸ்டார் இதற்கான அறிவிப்பை செய்தது.

அழைக்கவில்லை

அழைக்கவில்லை

இதற்காக அக்‌ஷய்குமார், ஆலியா பட், அஜய்தேவ்கன், அபிஷேக் பச்சன் ஆகியோரை வீடியோ பேட்டிக்கு அழைத்திருந்தனர். வருண் தாவனின் படம் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் அவரையும் இந்த பேட்டிக்கு ஹாட்ஸ்டார் அழைத்திருந்தது. ஆனால், வித்யூத் ஜாம்வால், குணால் கேமு ஆகியோரை அந்த நிறுவனம் அழைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வித்யூத் ஜாம்வால் ட்விட்டரில் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

அழைப்பும் அறிவிப்பும்

அழைப்பும் அறிவிப்பும்

'நிச்சயமாக பெரிய அறிவிப்புதான். ஏழு படங்கள் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் 5 படங்களின் நடிகர்கள் மட்டுமே கலந்துகொள்ள தகுதியானதாகக் கருதப்படுகிறது. மற்ற 2 படங்களுக்கு அழைப்பும் இல்லை, அறிவிப்பும் இல்லை. இது ஒரு நீண்ட சாலை. சுழற்சி தொடர்கிறது' என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

குறைந்தவர்கள் அல்ல

குறைந்தவர்கள் அல்ல

இவரைப் போல நடிகர் குணால் கேமுவும் ட்விட்டரில், 'மரியாதையும் அன்பும் கேட்கப்படுவதில்லை, அது பெறப்படுவது. யாரும் அதை நமக்கு தரவில்லை என்றால் அதற்காகக் குறைந்தவர்கள் ஆகிவிடமாட்டோம். எங்களுக்கும் களத்தைக் கொடுங்கள் ஆடுவதற்கு, நாங்களும் அதிக பாய்ச்சலை கொடுப்போம்' என்று கூறியுள்ளார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X