'ஆமா, அவரை காதலித்து வருகிறேன்..' ஒப்புக்கொண்ட அஜித் பட வில்லன்... அந்த நடிகைதானா அவர் காதலி?

By

சென்னை: பிரபல நடிகர், தனது காதலை உறுதிப்படுத்தியதை அடுத்து, அந்த நடிகையைதான் அவர் காதலிப்பதாகக் கூறப்படுகிறது.

அஜித்தின் பில்லா 2 படம் மூலம் தமிழுக்கு வந்தவர் இந்தி நடிகர் வித்யூத் ஜாம்வால். பிறகு விஜய்யின் துப்பாக்கி படத்தில் முக்கிய வில்லனாக நடித்தார்.

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்த அஞ்சான் படத்தில் அவர் நண்பனாக நடித்து கலக்கி இருந்தார்.

மார்ஷியல் ஆர்ட்ஸ்

மார்ஷியல் ஆர்ட்ஸ்

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வரும் வித்யூத், முறையாக மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றவர். இந்தியில் புல்லட் ராஜா, கமாண்டோ , ஜங்கிளி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் நடித்த குடா ஹாபிஸ் (Khuda Haafiz) என்ற படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

இந்திக்குச் சென்றார்

இந்திக்குச் சென்றார்

ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதில், ஷிவலீகா ஓபராய், அன்னு கபூர், ஷிவ் பண்டிட், ஆஹனா குமாரா உட்பட பலர் நடித்துள்ளனர். வித்யூத், ஜூனியர் என்.டி.ஆர், இலியானா நடித்த 'சக்தி' என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். இதில் வில்லனாக நடித்திருந்தார். இதையடுத்து இந்தியில் ஜான் ஆபிரகாம், ஜெனிலியா நடித்த ஃபோர்ஸ் படம் மூலம் இந்திக்குச் சென்றார்.

Recommended Video

KHUDA HAAFIZ TAMIL REVIEW | ASHWIN ANALYSE | FILMIBEAT TAMIL
அதிரடி ஆக்‌ஷன்

அதிரடி ஆக்‌ஷன்

மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றவர் என்பதால் வித்யூத் படங்களில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். இவர் நடித்த கமாண்டோ மற்றும் கமாண்டோ 2, ஜங்கிளி படங்கள் அதற்கு சாட்சி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியில், கமாண்டோ 2, கமாண்டோ 3 படங்களில் தன்னுடன் நடித்திருந்த அடா சர்மா பற்றி கூறியிருந்தார்.

நடிகை அடா சர்மா

நடிகை அடா சர்மா

'அடா சர்மா, எனக்கு தோழி மட்டுமல்ல, நாங்கள் அன்பானவர்கள், அக்கறை கொண்டவர்கள், அக்கறை இல்லாதவர்கள், சிறந்த நண்பர்கள்.. உங்களை போன்ற ஒருவரைதான் விரும்புகிறேன்' என்று கூறியிருந்தார். இதனால் இவர்கள் காதலித்து வருவதாகப் பேசப்பட்டது. ஆனால், இதை இருவரும் மறுக்கவில்லை.

ஹாலிவுட் நடிகர்

ஹாலிவுட் நடிகர்

இந்நிலையில், வித்யூத் ஜாம்வால், ஹாலிவுட் நடிகர், இயக்குனர் மற்றும் மார்ஷியல் ஆர்ட் கலைஞரானா மைக்கேல் ஜெய் ஒயிட்டுக்கு அளித்துள்ள பேட்டியில், தான் காதலில் இருப்பதாகக் கூறியுள்ளார். இப்போதுதான் அந்தப் பெண்ணை காதலிக்க ஆரம்பித்திருக்கிறேன். அதை முதன் முதலாக உங்களிடம் சொல்கிறேன்.

அறிவதற்கு முன்பாக

அறிவதற்கு முன்பாக

மற்றவர்கள் மூலம் நீங்கள் அறிவதற்கு முன்பாக சொல்கிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து நடிகர் வித்யூத் ஜாம்வால் சொல்லும் அந்தப் பெண், நடிகை அடா சர்மாதான் என்று பாலிவுட்டில் கூறப்படுகிறது. ஆனால், அவர் அதை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. நடிகர் வித்யூத் ஏற்கனவே டிவி நடிகை மோனா சிங்கை காதலித்து வந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X