சூர்யா வலுவான மனிதர்.. 'தல' அஜித் அப்படின்னா 'தளபதி' விஜய் இப்படி.. கணிக்கும் பிரபல வில்லன்!

By

சென்னை: நடிகர் விஜய் யாரையும் காயப்படுத்தும்படி நடந்துகொள்ள மாட்டார் என்று பிரபல வில்லன் நடிகர் தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகர் வித்யூத் ஜம்வால். இந்தியில் புல்லட் ராஜா, கமாண்டோ, ஜங்கிளி உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இப்போது குடா ஹாபிஸ் (Khuda Haafiz) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்திக்குச் சென்றார்

இந்திக்குச் சென்றார்

ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதில், ஷிவலீகா ஓபராய், அன்னு கபூர், ஷிவ் பண்டிட், ஆஹனா குமாரா உட்பட பலர் நடித்துள்ளனர். வித்யூத், ஜூனியர் என்.டி.ஆர், இலியானா நடித்த 'சக்தி' என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். இதில் வில்லனாக நடித்திருந்தார். இதையடுத்து இந்தியில் ஜான் ஆபிரகாம், ஜெனிலியா நடித்த ஃபோர்ஸ் படம் மூலம் இந்திக்குச் சென்றார்.

சூர்யாவின் நண்பர்

சூர்யாவின் நண்பர்

அஜித்தின் பில்லா 2 படம் மூலம் தமிழுக்கு வந்தார். பிறகு விஜய்யின் துப்பாக்கி படத்தில் முக்கிய வில்லனாக நடித்தார். லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்த அஞ்சான் படத்தில் அவர் நண்பனாக நடித்து கலக்கி இருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வரும் வித்யூத், முறையாக மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றவர்.

அதிரடி ஆக்‌ஷன்

அதிரடி ஆக்‌ஷன்

அதனால் அவர் படங்களில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். இவர் நடித்த கமாண்டோ மற்றும் கமாண்டோ 2, ஜங்கிளி படங்களில் அதிரடி ஆக்‌ஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், கமாண்டோ 2, கமாண்டோ 3 படங்களில் தன்னுடன் நடித்திருந்த அடா சர்மா பற்றி கூறியிருந்தார்.

நடிகை அடா சர்மா

நடிகை அடா சர்மா

'அடா சர்மா, எனக்கு தோழி மட்டுமல்ல, நாங்கள் அன்பானவர்கள், அக்கறை கொண்டவர்கள், அக்கறை இல்லாதவர்கள், சிறந்த நண்பர்கள்.. உங்களை போன்ற ஒருவரைதான் விரும்புகிறேன்' என்று கூறியிருந்தார். இதனால் இவர்கள் காதலித்து வருவதாகப் பேசப்பட்டது. ஆனால், இதை இருவரும் மறுக்கவில்லை. இந்நிலையில், வித்யூத் ஜாம்வால் அளித்துள்ள பேட்டியில், நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா பற்றி கருத்துத் தெரிவித்துள்ளார்.

வலுவான மனிதர்

வலுவான மனிதர்

அவர் அளித்த பேட்டியில், இந்த மூவருக்கும் வெற்றியை தவிர வேறு ஒற்றுமை இல்லை. அவர்கள் தங்கள் வழிகளில் விதிவிலக்கானவர்கள். அஜித், அசாதாரணமானவர் என்றால், நடிகர் விஜய் செட்டில் அனைவரையும் சகஜமாக இருக்கும்படி பார்த்துக்கொள்வார். யாரையும் காயப்படுத்தும்படி நடந்துகொள்ள மாட்டார். நடிகர் சூர்யா, மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் வலுவான மனிதராக இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X