இன்ஃபினிட்டி ஆயுதத்தில் சண்டை பயிற்சி.. துப்பாக்கி பட வில்லனின் புது முயற்சி !

மும்பை : ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கி இப்போது பாலிவுட்டில் வெற்றிகரமாக ஹீரோவாக வலம் வருபவர் வித்யூத் ஜம்வால்.

பில்லா-2 திரைப்படத்தை தொடர்ந்து துப்பாக்கியில் இவர் காட்டிய அதிரடித்தனமான வில்லத்தனம் பலரையும் கவர்ந்த நிலையில் அஞ்சான் திரைப்படத்தில் சூர்யாவிற்கு நண்பனாக வந்து தமிழ் ரசிகர்களிடம் நெருக்கமானார்.

தற்போது கமெண்டோ திரைப்படம் இவரை மாஸ் ஹீரோவாக பாலிவுட்டில் ஜொலிக்க வைத்த நிலையில் கடற்கரையில் புதுவிதமான ஆயுதத்தில் சண்டைப்பயிற்சி செய்தவாறு வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் அசந்துபோய், இந்த ஆயுதத்தின் பெயர் என்னவென்று ஆர்வத்துடன் கேட்டு வைரலாக்கி வருகின்றனர்.

சைலன்ட் வில்லன்

சைலன்ட் வில்லன்

சினிமாவில் வில்லன்களாக அதிரடி காட்டும் நடிகர்கள் சமீபகாலமாக ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வரும் நிலையில் விஜய், ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் தமிழில் வெளியான துப்பாக்கி திரைப்படத்தில் சைலன்ட்டான வில்லனாக அதிரடி காட்டிய வித்யூத் ஜம்வாலுக்கு இன்று வரை தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.

பாலிவுட்டில் பட்டையை கிளப்பி

பாலிவுட்டில் பட்டையை கிளப்பி

பில்லா-2, துப்பாக்கி என இரண்டு திரைப்படங்களிலும் வில்லனாக அசத்தியிருந்த வித்யூத் அதைத்தொடர்ந்து சூர்யாவுடன் இணைந்து அஞ்சான் திரைப்படத்தில் சூர்யாவின் நண்பனாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் மேலும் ஒரு படி மேலே சென்று இப்போது பாலிவுட்டில் பட்டையை கிளப்பி வருகிறார்.

கமாண்டோ

கமாண்டோ

சிறுவயது முதலே தற்காப்புக் கலைகளை முறையாக கற்று வந்த வித்யூத் ஜம்வால். இந்தியில் வெளியான கமாண்டோ திரைப்படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோ அவதாரம் எடுத்ததைத் தொடர்ந்து இவர் நடிக்கும் அடுத்தடுத்த திரைப்படங்கள் ரசிகர்களின் ஆதரவோடு வெற்றி பெற்று வருகிறது.

பாரபட்சம் பார்க்காமல்

பாரபட்சம் பார்க்காமல்

யாரா திரைப் படத்தில் ஸ்ருதிஹாசனுடன் நெருக்கமாக நடித்து முத்தக் காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகளில் பாரபட்சம் பார்க்காமல் பின்னி பெடலெடுத்து இருந்த இவரின் நடிப்பு பார்க்கும் அனைவரையும் அசர வைத்தது.

செம ஸ்மார்ட்

செம ஸ்மார்ட்

பறந்து பறந்து அடிக்கும் அதிரடி சண்டைக் காட்சிகளில் அசால்ட் செய்யும் வித்யூத் ஜம்வால் இப்பொழுது கடற்கரையில் வெள்ளை வேஷ்டியுடன் வெள்ளை டீ-சர்ட் அணிந்துகொண்டு செம ஸ்மார்ட்டாக கூலர்ஸ் அணிந்தவாறு, இன்ஃபினிட்டி ஆயுதத்தில் சண்டைப்பயிற்சி செய்தவாறு வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ட்விட்டர் பக்கத்தை கலக்கி வரும் நிலையில், இதனைப் பார்த்த ரசிகர்கள் வியந்து பார்த்தவாறு இவர் பயிற்சி செய்து வரும் அந்த ஆயுதத்தின் பெயர் என்ன என்பதை அறிய ஆவலுடன் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X