என்ன பண்றதுன்னே தெரியல, பார்க்க பார்க்க வலிக்குது: விக்னேஷ் சிவன்

By Siva

Recommended Video

ராஜலட்சுமிக்காக வருத்தப்பட்ட விக்னேஷ் சிவன்- வீடியோ

சென்னை: என்ன பண்றதுன்னே தெரியல, பார்க்க பார்க்க வலிக்குது என்று ராஜலட்சுமியின் கொலை குறித்து வேதனை தெரிவித்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ராஜலட்சுமி உயர் சாதியை சேர்ந்த வாலிபரின் ஆசைக்கு இணங்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் ராஜலட்சுமியை அவரின் தாய் கண் முன்பே தலையை துண்டித்து கொலை செய்தார்.

இந்நிலையில் ராஜலட்சுமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று திரையுலக பிரபலங்கள் சிலர் குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர்.

விக்னேஷ் சிவன்

இது போன்ற அரக்கன்கள் இருக்கும் இடத்தில் தான் நாம் வசிக்கிறோம். தினமும் எங்காவது இது போன்று நடக்கிறது. நம்மால் ட்வீட் செய்து, இரங்கல் தெரிவித்து, கவலைப்பட மட்டுமே முடிகிறது. என்ன பண்றதுன்னே தெரியல, பார்க்க பார்க்க வலிக்குது என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் ட்வீட்டியுள்ளார். #JusticeForRajalakshmi

ஜி.வி. பிரகாஷ் குமார்

தங்கை ராஜலட்சுமியின் பாலியல் படுகொலை ஒவ்வொரு ஆணும் வெட்கித் தலைகுனிய வேண்டிய பெருங்கொடுமை.

ஆணாதிக்கமும், சாதிய ஆதிக்கமும் கூட்டுச் சேர்ந்து நிகழ்த்திய பச்சைப்படுகொலை

#JusticeforRajalakshmi என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் நடிகர் ஜி.வி. பிரகாஷ்.

வேதனை

சாதியால் ஒரு சிறுமியின் உயிர் போய்விட்டது என்று வேதனைப்பட்டுள்ளார் நடிகர் சித்தார்த்.

நெட்டிசன்கள்

நெட்டிசன்கள்

13 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டது குறித்து அதிகாரம் படைத்தவர்களும், மீ டூ வுக்கு குரல் கொடுப்பவர்களும் கண்டுகொள்ளவே இல்லை என்று நெட்டிசன்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X